கைகளால் பேசிய காலத்தின் நினைவுகள் 
,வெளியிடப்பட்டதுநண்பர்கள் / பள்ளிப் பருவத் தோழர்கள் என்று நான் இந்தக் காதுகேளாத சைகை மொழிப் பயன்பாட்டாளர்களை அழைப்பது பிற்காலத்தில் எனக்கு ஏற்பட்ட புரிதல் அடிப்படையிலேயே என்பதை நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எவ்வளவு நட்பாகப் பழகியபோதிலும், எத்தனையோ உதவிகளை அவர்கள் எனக்கும் பிற பார்வையற்றோருக்கும் செய்த போதிலும், அவர்களை சமமாகவும் உரிய மரியாதையுடனும் கருதி நடத்தும் மனப் பக்குவத்தை அப்போது நாங்கள் அடைந்திருக்கவில்லை.