பாரா ஒலிம்பிக் மூலம் புகழ்பெற்று, அரசின் அரவணைப்பைப் பெற்றும் அரசு உறுதியின்படி அரசுப்பணி வழங்கப்படாத மாரியப்பன் அவர்களின் நினைவும் வந்துபோனது. அவருக்குக் கிடைத்த குறைந்தபட்ச அரவணைப்புகூட விஜேஷாந்திக்கு இல்லை என்பதை நினைக்கையில் ஊனத்தில்கூட பேதம் பார்க்கும் அரசின் ஊனப்பட்ட அணுகுமுறை அறுவறுப்பாய்படுகிறது.