தி மிராக்கில் வொர்க்கர்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்; அறியாமை போக்கக் கொடு! கை என்றவள். அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி, இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி, கற்றுக்கொள்ள சொல்லோவியக் கலை படைத்தவள்; - ஹெலன் பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள். ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.