தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.
Category: செய்திகள்
எப்படியிருந்தது ஏப்ரல் ஆறு களம்?
அன்பு்ள மாற்றுத்திறனாளி தோழமைகளே! எதிர்வரும் 6 ஏப்ரல் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றிட அன்புடன் வேண்டுகிறது சவால்முரசு. அத்துடன், தங்களது வாக்கு செலுத்திய அனுபவங்களை நீங்கள் விரும்பினால் எங்களுடன் பகிரலாம். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களின் அணுகுமுறைகள், நீங்கள் வாக்குச் செலுத்திய அந்தப் பெருமிதத் தருணம் என ஏப்ரல் ஆறு செவ்வாய்க்கிழமை உங்கள் கள அனுபவம் எதுவாகினும் சொல்லுங்களேன். நீங்கள் பகிர விரும்பும் உங்கள் அனுபவத்தை, சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலோ, அல்லது, 9789533964 என்ற எண்ணிலோ, குரல்ப்பதிவு அல்லது எழுத்து வடிவிலோ வழங்கலாம். மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர், mail@savaalmurasu.com என்ற முகவரிக்கும் எழுதலாம். ஏப்ரல் 6 காலை 7 மணி முதல், அன்று இரவு 10 மணி வரை. அனைவரும் அறிய, அனுபவம் பகிர்வோம்.
அறிவாலயத்தின் வாசலில்
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பளித்து வெற்றிபெற வைத்த கட்சி திமுக என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்கள் அதே அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்று அவர் மட்டும் அல்ல, அனைவருமே நம்பினோம்.
தமிழகத் தேர்தல் 2021: திமுக தேர்தல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பற்றி பேச்சே இல்லை
மாற்றுத் திறனாளிகளுக்கும் , அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படும்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: மனங்களைப் பிரதிபளிக்கும் தேர்தல் அறிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக அரசியல் சாசனப் பிரிவுகள் 15 மற்றும் 16 ல் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு: ஆதரவும் வாழ்த்துகளும்
Phd பட்டம் பெற்றது, கல்லூரியில் பாடம் நடத்தவா...?, இரயிலில் மிட்டாய் விற்கவா...?
வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை
மாணவர்களிடமிருந்து எழும் மன உலைச்சல் என்ற வார்த்தை வெறும் படிப்போடு மட்டும் தொடர்புடயது அல்ல. அது அவர்களுக்கும் அவர்களின் வீடு, சுற்றுப்புறம், குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணிகளோடு தொடர்புகொண்டது.
அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்
முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது
ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் தொடங்கியாயிற்று. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்பது எழுதப்பட்டிருக்கும் விதி அவ்வளவுதான். தேர்வு,எதிர்காலம் குறித்த கவலைகளில் பெற்றோர்கள் துணிந்துவிட்டார்கள். முடங்கிக் கிடத்தல் தந்துவிட்ட சளிப்புக்கும் தனிமைக்கும் ஆறுதலாய் பள்ளி செல்லத் தொடங்கியிருக்கின்றன பல கொடுத்துவைத்த செல்லங்கள். ஆனால், இங்கே எதற்கும் எப்போதும் பொறுப்பேற்க முன்வராத பல அதிகார பீடங்களால், தங்களின் நிலை என்னவென்றே அறியாமல் எப்போதும் குழப்பமும் திகைப்புமாய் இல்லப்பட்டிகளில் ஒரு எல்லைவரை வருவதும், எட்டிப் பார்த்துத் … Continue reading ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை
உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு
ஆறுமுகம் ரவீந்திரன் உரையாடல்கள் வழியே சமூக விழிப்புணர்வைக் கட்டமைக்கிற முக்கியப் பணியை தனது முதன்மை இலக்காகக்கொண்டு, அறிவுத்தளத்தில் இயங்கிவரும் பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் டிசம்பர் மாத கூட்டம் “இலங்கையில் பார்வையற்றோர் நிலை” என்ற தலைப்பில் நடந்தேறியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் வாழ்வகம் என்ற பார்வையற்றோருக்கான இல்லத்தின் தலைவரும், யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்புக் கல்வியியல் விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் திரு. ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். 1993ல் யாழ்ப்பாண பாடசாலையில் ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய திரு. ஆறுமுகம் … Continue reading உலகத் தமிழர்களே! உங்களின் கவனத்திற்கு