எம்மைப் பற்றி

வெற்றித்தடாகம் என்ற பெயரில் www.maatruthiran.com என்கிற இணைய முகவரியின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளமாகக் கடந்த டிசம்பர் 18 2018 அன்று தொடங்கப்பட்ட இந்தத் தளம் தற்போது சவால்முரசாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகள், கட்டுரைகள், நடுவண் மற்றும் மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக வெளியிடும் அறிவிப்புகள், அரசாணைகள், மாற்றுத்திறனாளிகளுக்காய் இயங்கும் அமைப்புகளின் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்படுகின்றன.