வாசிப்பாளர் உதவித்தொகை: புதிய நடைமுறையைக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருத்திப்பார்க்கக் கூடாது

வாசிப்பாளர் உதவித்தொகை: புதிய நடைமுறையைக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருத்திப்பார்க்கக் கூடாது

,வெளியிடப்பட்டது

வருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?

பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குச் செய்தித்தாள் வாசித்துக் காட்டும் வாசிப்பாளர்
பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குச் செய்தித்தாள் வாசித்துக் காட்டும் வாசிப்பாளர்

2022 – 23 ஆம் கல்வியாண்டில், அரசு சிறப்புப்பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் 970 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 2901000 கல்வி உதவித்தொகையாகவும், அதே பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் 235 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு ரூ. 705000 வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்குவதற்கான மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அவர்களின் செயல்முறைகள் வெளியாகி உள்ளன.

இந்தச் செயல்முறைகளில் வாசிப்பாளர் உதவித்தொகையினை வாசிப்பாளருக்கான வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்கிற புதிய நடைமுறை பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

மேற்கண்ட செயல்முறை நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசு சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கானது என்பதால், இந்த செயல்முறை ஆணை கல்லூரி பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குப் பொருந்தாது. இந்த விடயத்தில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, நிலவும் குழப்பத்திற்குத் தீர்வு காண வேண்டும்.

அதேசமயம், முன்பெல்லாம் அரசு சிறப்புப்பள்ளியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான வங்கிக்கணக்கிலேயே இந்தத்தொகை செலுத்தப்பட்டு வந்தது. தற்போது வாசிப்பாளர் உதவித்தொகை வாசிப்பாளரின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருப்பது மேலும் பல சிக்கல்களுக்கும் ஊழல்களுக்குமே வழிவகுக்கிற வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த புதிய நடைமுறையின் சாதக பாதகங்கள் விரிவாக ஆராயப்பட்ட பின்னரே அது அமல்ப்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் செயல்முறைகளைப் படிக்க மற்றும் பதிவிறக்க:

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *