பரிந்துரைகள் தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க:
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
பார்வையற்ற மாணவர்கள் தொடங்கி பெரும்பாலான பார்வையற்றவர்கள் செல்பேசியை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், பெரும்பாலானவர்கள் வாட்ஸ் ஆப், டெலகிராம் குழுக்களில் குரல்ப்பதிவிடுபவர்களாக, யூட்டூப் வழி காணொளிகளின் விசிறிகளாகவே இருக்கிறார்கள். மிகச் சிலர்தான் திரைவாசிப்பான்கள் துணைகொண்டு இதழ்கள், வலைதளங்கள் வாசிக்கிறார்கள் என்பது கசப்பானதென்றாலும் எதார்த்த உண்மை.
எனவேதான் பார்வையற்றோர் தொடர்பான முக்கிய விவாதங்கள், கருத்தாடல்களை யூட்டூப் வழியாக ஒளி மற்றும் ஒலிப்பதிவு வடிவில் வழங்க வேண்டியிருக்கிறது. உண்மையில் சில மணிநேரங்களைச் செலவிட்டு எழுதப்படும் செறிவான கட்டுரைகளை தளத்தில் வாசிப்பவர்களைவிட அதை யூட்டூப் காணொளியாகக் கேட்டபின் பின்னூட்டம் இடுபவர்களே அதிகம். ஊடகம் எதுவானாலும், சில கருத்துகள் பரவலாகச் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் பார்வையற்றோர் கல்வி தொடர்பான பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் பரிந்துரைகள் ஒளி, ஒலி வடிவிலும் வெளியிடப்படுகிறது.
மேற்கண்ட எங்களின் பரிந்துரைகள் குறித்த உங்களது கருத்துகள், ஏதேனும் விடுபடுதல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால் அவற்றைக் குறித்த குறிப்புகள், செம்மைப்படுத்தலாம் என்று நீங்கள் கருதும் அம்சங்கள் குறித்து உங்களது கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது
9629021773
மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com
உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் பார்வையற்ற சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் இப்பரிந்துரைகளை மேலும் மெருகேற்றப் பயன்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம், தமிழ் நாடு
பார்வையற்றோருக்கான மறுவாழ்வு என்ற ஒற்றை நோக்கத்தைச் சுமந்து வெவ்வேறு தளங்களிலும் களங்களிலும் பணியாற்றும் முக்கியத் தன்னார்வலர்கள் பார்வையற்றோருக்கான வாசிப்பு என்ற ஒருமித்த இலக்கோடு இணைந்திருக்கும் வாட்ஸ் ஆப் குழுமம்தான் விழியறம்.
அந்தக் குழுமத்தில் இந்த ஆவணத்தை ஒலிப்பதிவாக்கித் தர வேண்டும் என்று கேட்ட உடனேயே மாலைக்குள் வந்து சேர்ந்த பதிவுகளும் பகிர்வுகளும் மனதை நெகிழ்த்திவிட்டன.
இந்தக் காணொளிக்குப் பங்களிப்பு செய்த விழியறம் வாட்ஸ் ஆப் குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வ வாசிப்பாளர்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.
விழியறம் வாட்ஸ் ஆப் குழுமத்தில் இணைந்து பார்வையற்றோருக்கு தன்னார்வ வாசிப்பாளர்களாக செயல்பட விரும்பும் பார்வையுள்ளவர்கள்
9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குரல்ப்பதிவோ சிறிய அறிமுகக் குறிப்போ இடலாம்.
எங்கள் மொழித்திறம் பேணும், தங்களின் விழியறத்திற்கு நன்றிகள்.
Be the first to leave a comment