சகாக்கள் அட்டைப்படம்

சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

,வெளியிடப்பட்டது

யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.

சகாக்கள் அட்டைப்படம்

சகாக்கள் வாங்க:

சகாக்கள்: ஓர் அழுத்தமான கைகுலுக்கல், அப்பட்டமான கையளிப்பு

“சகாக்கள்: நிகரானவர்கள் ஆனால் வேறானவர்கள்”  இந்த புத்தகம் குறித்து என்னுடைய கருத்துக்களை முன்வைக்க உள்ளேன்.

இந்தப் புத்தகம் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் எவ்வாறு தவறாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

 மதம் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளைத் தவறாகக் கட்டமைக்கிறது, ஏபிலிசம் என்ற பெயரில் எவ்வாறு மாற்றுத்திறனாளிகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றனர் என்பது குறித்து இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சார்ந்த சமூகச் செயல்பாட்டாளர்களை இந்த புத்தகம் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த புத்தகத்தை நிர்மல் என்பவர் எழுதியிருக்கிறார். பொதுச் சமூகத்திடமிருந்து மாற்றுத்திறனாளிகள் எவற்றை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது புத்தகம்.

அக்காலகட்டத்தில் பழமொழிகள், கதைகள், புராணங்கள், நாட்டியங்கள் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளைத் தவறாக நகைச்சுவைப் பொருளாகச் சித்தரித்தன என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது.

Judith Heumann, Paul Hunt, Finkelstein போன்ற சமூகப் போராளிகள் குறித்து நானே தேடிப் படிக்கவில்லை என்பது எனக்கே வருத்தமாக இருக்கிறது.

அதேவேளையில் ஹிட்லர் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளை ஊசி போட்டு மலடாக்கினார், படுகொலை செய்தார் என்பது குறித்து இந்தப் புத்தகம் புதிய தகவல்களைக் கொடுக்கிறது.

யூதப் படுகொலைகள் குறித்துப் பேசும் நாம் மாற்றுத்திறனாளிகள் அடக்குமுறை படுகொலை குறித்து ஏன் படிக்கவில்லை என்று எனக்குள் கேள்வி எழுகிறது.

1990க்குப் பிறகு அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த புரிதல் ஏற்பட்டிருக்கிறது என்று இந்த எழுத்தாளர் கூறுகிறார்.

1990 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைக்காகப் போராடினர் என்று படிக்கும்பொழுது உலக வரலாற்றில் மாற்றுத்திறனாளிகள் ஒடுக்குமுறை குறித்துப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் புத்தகத்தை படித்து முடித்த பிறகு எனக்குள் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

உன் போராளிகள் சார்ந்த வரலாற்றை நீ ஏன் படிக்கவில்லை?

நான் தமிழ் தேசியவாதி/பெரியாரியவாதி/அம்பேத்கரியவாதி/பொதுவுடைமைவாதி என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன?

சித்தாந்தங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதால் மாற்றுத்திறனாளியாக எனக்கு விளைந்த பயன்கள் என்ன?

சித்தாந்தங்கள் குறித்துப் படிக்கும் நாம் நம் சமூகப் போராளிகள் குறித்துப் படிக்க மறந்துவிட்டோமோ? என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

போராட்டங்களின் மூலம் தொடவேண்டிய தூரங்கள் நிறைய இருக்கின்றன, வென்றெடுக்க வேண்டிய அதிகாரங்கள் நிறைய இருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகளாக நாம் எப்போது ஒன்றிணையப் போகிறோம்?

மாற்றுத்திறனாளிகள் ஒற்றுமை இல்லாமல் பொதுச் சமூகத்திடம் மாற்றுத்திறனாளிகள் குறித்துப் புரிதல் ஏற்படுத்துவது சாத்தியம் தானா என்ற கேள்விகளும் எனக்குள் எழுகின்றன.

இந்த புத்தகம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதேசமயம் வரலாற்றுத் தேடல் குறித்து நம்மை ஊக்கப்படுத்துகிறது.

***செ. வெங்கடேஷ்

பார்வை மாற்றுத்திறனாளியான இவர், இளங்கலை ஆங்கிலம் முடித்திருக்கிறார். தற்போது போட்டித் தேர்வுகளுக்காக தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

தொடர்புக்கு: tamilvalavan730@gmail.com

1 thought on “சகாக்கள்: எனக்குள் எழும் கேள்விகள் – செ. வெங்கடேஷ்

  1. “சித்தாந்தங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பதால் மாற்றுத்திறனாளியாக எனக்கு விளைந்த பயன்கள் என்ன?”
    என்ற தோழர் வெங்கடேசனின் கேள்வி மிகவும் நுட்பமானது. சித்தாந்தங்களை நாம் அகநிலையில் புரிந்துகொண்டு, அவற்றை நிகழ்காலச் சூழல்களுக்கு திறந்த மனத்துடன் பொருத்திப் பார்க்க முற்படுவதில்லை என்பதே அடிப்படைச் சிக்கல் என்பது என்னுடைய கருத்து. பெரியாரியம்/அம்பேத்கரியம்/மார்க்சியம் ஊனமுற்றோர், ஊனம் மட்டுமின்றி நிலவும் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலைப் புரிந்துகொள்ள எனக்கு இன்றியமையாததாக இருந்திருக்கிறது என்றே நம்புகிறேன். அமைப்புரீதியான செயல்பாடுகள் அல்லது பற்றுதல் நமது சித்தாந்தப் புரிதலைக் கெட்டிப்படுத்திவிடுகிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *