வெளிச்சம் பாய்ச்சுவோம் (3)

வெளிச்சம் பாய்ச்சுவோம் (3)

,வெளியிடப்பட்டது

பல பார்வையற்ற தோழர்களின் கண்கள் பார்ப்பதற்கு மிக இயல்பாக, சாதாரணத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு நூறு விழுக்காடு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும்.

தொடரின் முந்தைய பகுதிகள்

ஆணிக்கட்டைகளைப் பயன்படுத்தி பிரெயில் கற்கும் குழந்தைகள்
பிரெயில் புள்ளிகளை ஆணிக்கட்டைகள் வாயிலாகக் குழந்தைகளுக்குக் கற்பித்தல்

சமூகவிரோதிகளின் பெரும்பாலான கடத்தல் சம்பவங்களில் கடத்தப்படும் நபரின் கண்கள்தான் முதலில் கட்டப்படுவதாக அறிகிறோம். காரணம், மனிதன் பார்வைக்குட்பட்ட அனைத்தும், வண்ணங்களாக, வடிவங்களாக மிக எளிதாகவும், விரைவாகவும் அவனது நினைவடுக்குகளில் குடியேறி அதிக நாட்களுக்கு அங்கேயே தங்கிவிடும் தன்மை கொண்டவை.

மனிதன் பெறுகிற அறிவில் 85 விழுக்காடு அறிவினைப் பார்வைப்புலம் வாயிலாகவே பெறுகிறான். உரத்துச் சொல்லும் ஒருநூறு வலிமையான வார்த்தைகளால் கடத்த இயலாத உணர்வின் வலியை, வாஞ்சையைக்கூட ஒரே ஒரு பார்வை எளிதாகக் கடத்திவிடுகிறது.

அதனால்தான் உணர்வுகளின் பெருங்கூடாகிய மனிதனுக்குக் கண் ஓர் இன்றியமையாத உறுப்பாகும். அத்தகைய கண் பாதிப்படையும்போது அதன் முதன்மைச் செயல்பாடான பார்வயும்  பாதிப்புக்குள்ளாகிறது. இதையே நாம் பார்வையிழப்பு அல்லது பார்வைக்குறைபாடு என்கிறோம்.

பார்வையிழப்பிற்கான காரணங்கள்:

பார்வையிழப்பிற்கான காரணங்களை நாம் இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம்.

அவை: 1. பிறவிக் காரணங்கள்.

2. இடைப்பட்ட காரணங்கள்.

பிறவிக் காரணங்கள்:

விழிகளால் உணரப்படும் பிம்பங்கள், விழித்திரையில் விழுந்து அவை உணர் நரம்புகல் வழியாக மூளைக்குக் கடத்தப்பட்டு, அவை இன்னதென்ற அறிவு பிறப்பிக்கப்படுகிறது. விழித்திரை மற்றும் நரம்புகளின் பாதிப்புகளால் மூளைக்கும் பருப்பொருள்களுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதையே நாம் முழுப்பார்வையற்ற நிலை என்கிறோம்.

பல பார்வையற்ற தோழர்களின் கண்கள் பார்ப்பதற்கு மிக இயல்பாக, சாதாரணத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு நூறு விழுக்காடு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும். காரணம், கண்ணின் புறத்தோற்றத்திற்குக் காரணமான கருவிழியில் என்த ஒரு பாதிப்பும் ஏற்படாத நிலையில், கண்ணின் உள் அமைப்புகளான விழித்திரை, பார்வை நரம்புகல் ஆகியவை ஒருவரின் பிறப்பிலேயே பாதிப்படைந்திருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். இத்தகைய குறைபாட்டினை முழுமையாகச் சரிசெய்வதற்கான சிகிச்சைகள் இதுவரை கிடையாது.

இன்த உண்மையை அறியாத பல பெற்றோர்கள், தங்களின் அன்றாட சேமிப்புகளைத் தங்கள் பிள்ளைகளின் பார்வையிழப்பைச் சரிசெய்வதிலேயே செலவழித்துவிடுகிறார்கள். ஒன்றுமே இயலாது என்பதை மிகத் தாமதமாகத்தான் உணர்கிறார்கள்.

கண் தானம் பலன் அளிக்குமா?

நான் பிறந்து மூந்றே மாதங்களில் எனது ஒரு கண் ஊதா நிறத்தில் மாறிவிட்டதைக் கண்ட என் பெற்றோர் அலறினார்கள். அருப்புக்கோட்டை தினகரன் மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைகள் பெற்றும் பலனில்லை. அப்போது அரவிந்த் மருத்துவமனையின் கண் மருத்துவரிடம் என் பெற்றோர் கேட்டது இதைத்தான்.

“கண்தானம் பலனளிக்குமா? ஆம் என்றால், எங்கள் இருவரிடமிருந்து தலா ஒரு விழியை எடுத்து அவனுக்குப் பொருத்திவிடுங்கள்”

அந்த மருத்துவரின் பதில்… நாளை.

தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம், இருள் ஓட்டுவோம்!

***ப. சரவணமணிகண்டன்

***

கல்வி உரிமைகளைக் காக்க கரம் கொடுங்கள்.

கருத்துகளை வழங்குவதோடு, கட்டாயம் படித்தபின் பகிருங்கள்.

பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும்

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோரின் பரிந்துரைகள்:

அன்புடையீர் வணக்கம்!

தமிழக அரசு உருவாக்கிவரும் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோர்களுக்கு இருக்கும் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தொகுத்து, மாநில அரசுக்குப் பரிந்துரைகளாக வழங்க பார்வையற்றோர்களின் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. எனவே பார்வையற்றோர்களுக்கான #சிறப்பு, #ஒருங்கிணைந்த #உள்ளடங்கிய கல்வி சார்ந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பார்வையற்றோர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளும், பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சியின்மீது அக்கறை கொண்டவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்களும், பிர பார்வையற்றவர்களும், பொதுமக்களும் மாநிலக் கல்விக்கொள்கை பரிந்துரைக்குத் தங்களுடைய கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது

     9629021773

மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com

உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் அனைத்தும், ஆரோக்கியமான விவாதத்துக்குப் பிறகு தொகுக்கப்பட்டு, மாநில கல்விக்கொள்கை குழுவிடம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்