மாநில அளவிலான மாதிரித்தேர்வு

மாநில அளவிலான குரூப் 4 மாதிரித்தேர்வு

,வெளியிடப்பட்டது

விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 5 2022.

பார்வைத்திறன் குறையுடைய பணி நாடுனர்களின் கவனத்திற்கு!

ஆன்சலிவன் பயிற்சி மைய லோகோ

அன்பார்ந்த பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களே!

நீங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருகிறீர்களா?

எவ்வளவோ திட்டமிட்டு எத்தனைமுறை படித்தாலும், தேர்வுக்கான பதட்டத்தோடே இருக்கிறீர்களா?

எத்தகைய வினாக்கள் வரும்? எப்படி எதிர்கொள்்வது?

நான் முழுத் தயாரிப்பை எட்டிவிட்டேனா

போன்ற கேள்விகள் உங்கள் மனதைக் குடைந்தபடியே இருக்கின்றனவா?

இதோ! உங்களின் அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை விடையாய், நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கான ஒரு முன்னோட்டமாய்

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் (Anne Sullivan Coaching Centre for Competitive Exams for Visually Impaired Anne Sullivan CCC) நடத்தவிருக்கும் மாநில அளவிலான குரூப் 4 இணையவழி மாதிரித்தேர்வு.

நாள்: ஜூலை 17 2022 ஞாயிற்றுக்கிழமை.

நேரம்: காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை.

தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் கவனத்தில்கொள்ள வேண்டியவை:

*பங்கேற்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வாட்ஸ் ஆப் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு உங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பிட வேண்டும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய தகவல்கள்:

*பெயர்,

*வாட்ஸ் ஆப் தொடர்பு எண்,

*மின்னஞ்சல் முகவரி,

*பதிலி எழுத்தர் தேவை/தேவை இல்லை.

உங்கள் தகவல்களை அனுப்ப வேண்டிய வாட்ஸ் ஆப் எண்கள்:

9655013030,

9994636936,

9789533964.

*விண்ணப்பிக்க இறுதிநாள் ஜூலை 5 2022.

*முதலில் விண்ணப்பிக்கும் நூறு பார்வைத்திறன் குறையுடைய பணிநாடுனர்களுக்கு மட்டுமே தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

*இணையவழித் தொழில்நுட்பம் அறியாத  தேர்வர்களுக்குப் பதிலி எழுத்தர்கள் ஏற்பாடு செய்யப்படும்.

பிறகென்ன!

போட்டித்தேர்வுக்கான உங்கள் தயாரிப்பின் முழு வடிவத்தையும் நீங்களே சோதித்தறிய வேண்டுமா?

கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்களுக்கு உங்கள் தகவல்களை விரைந்து அனுப்பி, மாநில அளவிலான மாதிரித்தேர்வில் பங்கேற்றுப் பயன்பெறுங்கள்.

தேர்வில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துகள்.

1 thought on “மாநில அளவிலான குரூப் 4 மாதிரித்தேர்வு

  1. அனைவரும் பங்கேற்று பலன் பெற்றிட வாழ்த்துகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *