உங்கள் ஊரில், உங்கள் தெருவில் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டால் அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லுங்கள்.

செய்தி வெளியீடு எண் : 975 நாள்: 15.06.2022
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக செய்தி வெளியீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 10 பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள், 10 செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகள், 1 கை, கால், இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான அரசு சிறப்புப்பள்ளிகள், 1 மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் ஆக மொத்தமாக 22 அரசு சிறப்புப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மேற்காணும் சிறப்புப்பள்ளிகளில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
இச்சிறப்புப்பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கென ஆண்கள் , பெண்கள் என தனித்தனி இலவச விடுதி வசதி, விடுதிகளில் தங்கி பயிலும் மற்றும் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் மாணவ / மாணவியர்களுக்கு சத்தான உணவு, காற்றோட்டமான வகுப்பறைகளும், நான்கு செட் விலையில்லா சீருடை, விலையில்லா புத்தகங்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ / மாணவியர்களுக்காக ப்ரெய்லி புத்தகங்கள், 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ / மாணவியர்களுக்கு அவர்கள் எளிதாக கல்வி பயில்வதற்கு ஏதுவாக தமிழக அரசால் விலையில்லாமல் ஏஞ்சல் ப்ரோ எனும் உதவி உபகரணம் ஆகியன வழங்கப்படுகின்றன. மேலும், இச்சிறப்புப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்குரிய உதவி உபகரணங்களும், தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளும், கல்வி உதவித்தொகை மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ / மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களுக்கென கல்வி பயில்வதற்கு ஏதுவாக சிறப்புக்கல்வி பெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. இச்சிறப்புப்பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களின் கணினி திறனை மேம்படுத்த ஏதுவாக சிறந்த கணிணி பயிற்றுநர்களை கொண்டு கணினிப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நலனை மேம்படுத்த தமிழக அரசால் நடத்தப்படும் அரசு சிறப்புப்பள்ளிகளில் சேர்க்க இணைப்பில் கண்டுள்ள சிறப்புப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களை தொடர்பு கொண்டு இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அரசு சிறப்புப்பள்ளிகளின் விவரங்கள்
வ. எண். | சிறப்புப்பள்ளியின் பெயர் மற்றும் முகவரி | அலுவலக தொலைபேசி எண் |
1 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு மேல்நிலைப்பள்ளி, பூவிருந்தவல்லிரோடு, பூவிருந்தவல்லி, சென்னை-600056. | 044-26272080 |
2 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர்-613001. | 04362-272222 |
3 | பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புத்தூர், திருச்சி-620017 | 0431-2794945 |
4 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு நடுநிலைப்பள்ளி, 572, கே.கே.நகர், மதுரை-625020. | 0452-2529502 |
6 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு நடுநிலைப்பள்ளி, பங்களாதெரு, செவ்வாய்ப்பேட்டை, சேலம்-636002 | 0427-2213188 |
7 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு தொடக்கப்பள்ளி, நெல்லிக்குப்பம், கடலூர்-607001. | 04142-222447 |
8 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு தொடக்கப்பள்ளி, உலியம்பாளையம், தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர்-641109 | 0422-2917113 |
9 | பார்வைத்திறன் குறையுடையோருக்கானஅரசு தொடக்கப்பள்ளி, 9/1, ரயில்வே ஸ்டேசன் ரோடு, தருமபுரி-636701. | 04342-267211 |
10 | பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, இளையான்குடிசாலை, அம்பேத்கார் சிலைசமீபம், சிவகங்கை-630561. | 04575-240458 |
11 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு மேல்நிலைப்பள்ளி, கலெக்ட்ரேட் அஞ்சல், இலக்கியம்பட்டி, தருமபுரி-636705. | 04342-232418 |
12 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூர்-613001. | 04362-274769 |
13 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீநிவாசாகாலனி, சூரமங்கலம், சேலம்.-636005. | 0427-2442067 |
14 | செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சி.எம்.நகர், ஆர்.என்.புதூர், ஈரோடு-638305 | 0424-2535860 |
16 | செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, சூலக்கரை, விருதுநகர்-626003 | 04562-253105 |
17 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு உயர்நிலைப்பள்ளி, சடாவரம், ஒரிக்கைஅஞ்சல், காஞ்சிபுரம்-631502. | 044-27267322 |
18 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு நடுநிலைப்பள்ளி, 14,ஸ்ரீ நாராயணசாமிநகர், (தண்டபாணிநகர் அருகில்), வரக்கல்பட்டு அஞ்சல், நத்தப்பட்டு, கடலூர்-607109. | 04142-221744 |
19 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு நடுநிலைப்பள்ளி, 8ஏ, ஹோம் ரோடு, ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானிடோரியம், சென்னை- 600047 | 044-29710196 |
20 | செவித்திறன் குறையுடையோருக்கானஅரசு நடுநிலைப்பள்ளி, 66, காட்டுபுதுக்குளம், புதியபேருந்துநிலையம் அருகில், புதுக்கோட்டை-622001. | 04322-226337 |
21 | கடுமையானஇயக்கத்திறன் பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கானஅரசுநடுநிலைப்பள்ளி, வில்லாபுரம் ஹவுசிங் யூனிட், மதுரை-625011 | 9499933442 |
22 | மனவளர்ச்சி குன்றியோருக்கானஅரசுநிறுவனம், 8ஏ, ஹோம் ரோடு, சர்வீஸ் ஹோம் பின்புறம், ஜட்ஜ் காலனி, தாம்பரம் சானிடோரியம் – சென்னை – 600047. | 044-22234101 |
******
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
குறிப்பு:
அரசின் பட்டியலில் ஐந்தாவதாக இடம்பெற வேண்டிய பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை பெயர் விடுபட்டிருக்கிறது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452.
Be the first to leave a comment