மாற்றியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: முழு விவரம் என்ன?

மாற்றியமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: முழு விவரம் என்ன?

,வெளியிடப்பட்டது

இவ்வாலோசனை வாரியத்தில் நியமனம் செய்யப்படும் அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 – இன் சட்டப்பிரிவுகள் 67 முதல் 71 வரை கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடும் முதல்வர் மு.க. ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைத் தலைவராகக்கொண்டு, அரசின் முக்கியத் துறைகளின் செயலர்கள்மற்றும் மூன்றுசட்டமன்ற உறுப்பினர்களை  அலுவல் சார் உறுப்பினர்களாகக்கொண்டு இவ்வாரியம் செயல்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வில் அனுபவமும் நிபுணத்துவமும் மிக்க நபர்கள் ஐந்துபேர், சுழற்சி முறையில் மாவட்ட வாரியாக நியமிக்கப்படும் ஐவர், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நபர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவர் ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்களாகப் பதவி வகிப்பார்கள்.

இந்த வாரியமானது, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016 – இன், சட்டப் பிரிவு 71இன்படி, கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ளும்: அவை:

1. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும், மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அவர்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும் கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும்.

2. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது கீழ்கண்ட பணிகளையும் மேற்கொள்ளும்:

(a) மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கொள்கைகள், செயல்முறைத் திட்டங்கள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் ஆலோசனைகளை வழங்குதல்.

(b) மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களைக் களையும் வண்ணம் மாநிலக் கொள்கைகளை மேம்படுத்துதல்.

(c) மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து செயல்படும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவைகளின் நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்,

(d) மாற்றுத்திறனாளிகளின் நலன் தொடர்பாக செயல்படுத்தப்படும் மாநில அரசின் திட்டங்களின் கருத்துகளை மாற்றுத்திறனாளிகள் நலன்சார்ந்த அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பெற்று வழங்குதல்,

(e) மாற்றுத்திறனாளிகளுக்கான சூழலை உருவாக்குதல், ஏதுவான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்துவதை தடை செய்தல், அவர்களுக்கான பாகுபாடுகளைக் களைதல், சேவைகள் அளித்தல், உகந்த சூழல்களை உருவாக்குதல் மற்றும் சமூகத்தில் அவர்களது பங்களிப்பை உறுதிசெய்தல் குறித்த பரிந்துரைகளை அளித்தல்.

(f) மாற்றுத்திறனாளிகளுக்கு முழு பங்கேற்பினை உறுதி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தினை கண்காணித்து மதிப்பீடு செய்தல்.

(g) மாநில அரசால் அவ்வப்போது ஒதுக்கப்படும் பிற பணிகளையும் மேற்கொள்ளுதல்,

மேலும், இவ்வாலோசனை வாரியத்தில் நியமனம் செய்யப்படும் அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016 – இன் சட்டப்பிரிவுகள் 67 முதல் 71 வரை கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்படுவர் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அலுவல் சார் உறுப்பினர் மற்றும் பிற உறுப்பினர்களின் விவரம்:

(அ) மாண்புமிகு முதலமைச்சர் இந்த ஆலோசனை வாரியத்தின் தலைவராவார்.

(ஆ) வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் மாநில அரசின் செயலாளர்கள் விவரம்|

1. அரசுச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

2. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை

3. அரசு முதன்மைச் செயலாளர், உயர் கல்வித் துறை

4. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

5. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், | நிதித்துறை

6.அரசுச் செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை

7.அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை

8.அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சிமற்றும் ஊராட்சித் துறை 9.அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தொழில் துறை

10. அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை

11. அரசு முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

12. அரசு முதன்மைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் துறை

13. அரசு முதன்மைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

14. அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்து துறை

சட்டமன்ற உறுப்பினர்கள் |

1.டாக்டர் நா.எழிலன், | ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

2.திரு. A.G. வெங்கடாசலம், அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

3.திரு.சு.ரவி, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

(ஈ) மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள்

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுப் பணியில்அனுபவம் மற்றும் நிபுணத்துவம் மிக்க ஐந்து உறுப்பினர்கள்:

(1.திருமதி. எல்.வி.ஜெயஸ்ரீ.

இயக்குநர்,- | (Spastics Society of Tamil Nadu),

2.டாக்டர் பி.ஆர்.லட்சுமி,

| நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர்,

மூலக்கூறு நோயறிதல்,

கலந்தாய்வு, விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி நிலையம் (MDCRC),

நிலை 7, ராயல் கேர் சூப்பர்ஸ்பெசாலிட்டி மருத்துவமனை,

1/520, எல் அன்ட் டி புறவழிச்சாலை,

நீலம்பூர்.

கோயம்புத்தூர் – 641062

| 3.டாக்டர் கே.வி.கிஷோர்குமார்,

இயக்குநர்,

பான்யன் & பாம் அறக்கட்டளை

| (The Banyan & Balm Trust),

| 6 – வது பிரதான சாலை, முகப்பேர்

ஏரித் திட்டம், முகப்பேர் மேற்கு.

சென்னை 600 037.

4.திருமதி. லட்சுமி ஹரிகரன்,

மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா கழகம் (Madras Dyslexia Association),

பார்க் வியூ, முதல்தளம்,

94, G.N. செட்டி சாலை, (ஜீவா பூங்கா அருகில்), |

தி.நகர், சென்னை -17,

5.டாக்டர் சுரேகா ராமசந்திரன்,

தலைவர்,

இந்திய டவுன் சின்ட்ரோம் கூட்டமைப்பு

(Down Syndrome Federation of India),

புதிய எண்: 15, பழைய எண்.27, சி.பி.ராமசாமி சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை – 18

(ii) மாவட்டங்களிலிருந்து (சுழற்சி அடிப்படையில்). ஐந்து உறுப்பினர்கள்

1.டாக்டர் வி.நாகராணி, |

நிறுவனர்/அறங்காவலர்,

ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்,

எண்.47, புனித தோமையர் தெரு,

காமராஜபுரம்,

பட்டாபிராம்,

திருவள்ளூர்- 600072

2. திருமதி. எஸ்.சிவகாமி,

எண்.36, சிதம்பரம் சாலை,

சமுதாயக்கூடம்,

ஜெயங்கொண்டம்,

அரியலூர் 621802

3.திரு.ஏ.கே.செல்வம்,

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம்,

மேல நெம்மக்கோட்டை,

ஆலங்குடி வட்டம்,

புதுக்கோட்டை மாவட்டம்.

4.திரு. எஸ். சிவகுமார்,

3/3, திலகர் மைதானம்,

சின்னபுளியம்பட்டி,

அருப்புக்கோட்டை,

விருதுநகர் – 626 101.

5.திரு.டி.ஜாகீர் உசேன்,

67/2, அண்ணா சாலை,

சின்ன திருப்பதி,

சேலம் 636008.

(iii) அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களிலிருந்து | பதினொன்று உறுப்பினர்கள்

1. திருமதி. ஸ்மிதா சாந்தகுமாரி சதாசிவன்,

Disability Rights Alliance TamilNadu,

சி.1 அன்பொளி அடுக்ககம்,

7/4, குருவப்பன் தெரு,

கோட்டூர். சென்னை -600 085

2. திருமதி. வி. யசோதா,

டிசம்பர் 3 இயக்கம்,

33, செக்கு மேட்டுத்தெரு,

கள்ளக்குறிச்சி 606202.

3.செல்வி. ப்ரித்தி சீனிவாசன்,

சோல் பிரி குழு வந்தனா,

108/1, மணகுளவிநாயகர் கோயில் தெரு,

செங்கம் சாலை,

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் எதிர்புறம்,

திருவண்ணாமலை மாவட்டம்.

4.திருமதி ஜே.செல்வகுமாரி,

| தமிழ்நாடு காதுகேளாத மகளிர் ” சங்கம்,

17, புதிய காமராஜர் நகர், | 4 வது காலனி,

ராயபுரம், சென்னை 600013.

5.செல்வி.டி.கஸ்தூரி,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும்

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்,

மேலத்தெரு, தென்னமநாடு தெற்கு,

தென்னமநாடு,

ஒரத்தநாடு வட்டம்,

தஞ்சாவூர் – 614625,

6.திரு.எஸ்.முத்துகுமார்,

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் | மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை,

4/36, குழந்தைபட்டிகாளியம்மன் கோயில் தெரு,

சீலப்பாடி அஞ்சல்,

முள்ளிப்பாடி கிராமம்,

திண்டுக்கல் 624 005.

7.திரு.டி.கே. விஜயகுமார்,

1/148, தைய்யகுனி (H),

கொன்னச்சல் அஞ்சல்,

எருமாடு,

நீலகிரி- 643239,

8.திரு. கே.ரகுராமன்,

| கர்ண வித்யா பவுண்டேசன்,

1 ஏ, காளமேகம் தெரு,

கிழக்கு தாம்பரம்,

சென்னை 600059.

9.திரு.எஸ்.துரைராஜ்,

ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனுடையோர் நலச் சங்கம்,

18-19, தனலெட்சுமி கார்டன்,

முகாசிபுலவன்பாளையம் (கிராமம்),

வெள்ளோடு,

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம்,

10. திரு. எம். கோபால கிருஷ்ணன்,

Progressive Association of the Differently Abled,

எண்.21, டாக்டர் அப்துல்கலாம் தெரு.

விவேகானந்தா நகர்,

பெரமனூர்,

மறைமலைநகர்,

செங்கல்பட்டு 603209.

11.திரு.நா.கருணாநிதி,

C2/18, பொதுப்பணித்துறை குடியிருப்பு,

தாடண்டர் நகர்,

சைதாப்பேட்டை,

சென்னை -600015.

(iv) மாநில வர்த்தக மற்றும் தொழிற் சபை சார்பாக மூன்று உறுப்பினர்கள்

  1. திரு. எஸ். அன்புராஜன், |

தமிழ்நாடு சிறு மற்றும் குறு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TANSTIA)

எண்.10. ஜி.எஸ்.டி. சாலை,

கிண்டி, சென்னை 600032.

2.திரு.ஆர்.ராதாகிருஷ்ணன்,

மண்டல துணைத்தலைவர்,

அகில இந்திய உற்பத்தியாளர் கூட்டமைப்பு (AIMO), ட்ரியடாஸ் (Triadas)

எஸ்: 1, இரண்டாவது தளம்,

எண்.21, சீனிவாச நகர்,

கந்தன்சாவடி,

பழைய மாமல்லபுரம் சாலை சென்னை – 96.

3.திரு.டி.வி.ஹரிகரன்,

துணைத்தலைவர்,

குறு வணிக நிறுவனங்களின் கூட்டமைப்பு,

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அலுவல் சார் உறுப்பினர் செயலராகப் பதவி வகிப்பார். எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணையைப் பதிவிறக்க:

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *