கர்ணவித்யா மற்றும் அருள்விழிகள் இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி

கர்ணவித்யா மற்றும் அருள்விழிகள் இணைந்து நடத்தும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி

,வெளியிடப்பட்டது

மாணவர்கள் 20 ஏப்ரல் 2022 வரை (புதன்) அன்றுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கர்ணவித்யா லோகோ

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவரா நீங்கள்?

பயிற்சியின் மூலம் முயற்சிகளை மெருகூட்டிக்கொள்ள உங்களை அழைக்கிறது கர்ணவித்யா அமைப்பு!

ஆம் நண்பர்களே… Group 4 மற்றும் group 2 போட்டித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக நம் கர்ணவித்யா அறக்கட்டளை அருள்விழிகள் அமைப்புடன் இணைந்து 20-04-2022(புதன்) முதல் போட்டித்தேர்வுப் பயிற்சியை நடத்த இருக்கிறது.

பயிர்ச்சி குறித்த தகவல் மற்றும் குரிப்புகள்:

இப்பயிற்சியில், தேர்வுக்கான பாடங்கள் எதுவும் நடத்தப்பட மாட்டாது.

 மாதிரித்தேர்வுகள் நடத்தல், முறையான பின்னூட்டங்களை வழங்கல், மாணவர்களுக்கு இருக்கும் தேர்வு அச்சத்தைப் போக்கி போட்டித்தேர்வை எளிமையாகக் கையாளும் யுத்திகளை வழங்குதல் இப்பயிற்சியின் நோக்கங்களாகும்.

ஏற்கனவே தேர்வுக்குத் தயாராகிக்கொன்டிருக்கும் மாணவர்கள் இப்பயிற்சியில் பங்குபெறுவது சிறப்பாக இருக்கும்.

பயிற்சியானது இணையவெளியிலும் நேரடி வகுப்பாகவும் நடத்தப்படும்.

பயிற்சி நடத்தப்படும் முறை:

பயிற்சிக்கென சிறப்பு வாட்ஸாப்  குழு செயல்படும்.

குழுவில்  வினாத்தாள் பகிரப்பட்டு மாதிரித்தேர்வு நடத்தப்படும்.

தேர்வுத்தாள் மதிப்பீட்டிற்கு உற்ப்படுத்தப்பட்டு, வாரத்திற்கு ஒருமுறை பயிற்றுநரால் முறையான பின்னூட்டங்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் கீழே உள்ள இணைப்பின்மூலம் பயிற்சிப் படிவத்தை நிரப்பலாம்.

மாணவர்கள் 20 ஏப்ரல் 2022 வரை (புதன்) அன்றுக்குள் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://forms.gle/PrvyvYAX19FCTz9J7

முயற்சியினாலும் பயிற்சியினாலும் தேர்வில் தேர்ச்சிபெற வாழ்த்துக்கள்!

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்