ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.

பட மூலம்: தி இந்து
கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
தும்பி சிறார் இதழின் சில கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கண்பார்வையற்ற குழந்தைகள் வாசிக்கும்படி ப்ரெய்லி நூலாக அச்சாக்கம் கொண்டுள்ளது. முதற்கட்டமாக, இலங்கையின் காப்பகங்களில் உள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு இப்புத்தகங்கள் அனுப்பப்படவுள்ளது. கூடிய விரைவில், தமிழகத்தின் பார்வைக்குறையோடுள்ள குழந்தைகளுக்கும் தும்பியின் ப்ரெய்லி வடிவம் சென்றடையும்.
ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார். இந்த நல்லசைவு குறித்து ஆங்கில ஹிந்து நாளிதழில் தோழமை அகிலா கண்ணதாசன் அவர்கள் பதிவுசெய்த நேர்காணல் வெளியாகியுள்ளது.
ஒரு எண்ணம் செயலாகப் பரிணமிப்பதின் முதற்துவக்கமாய் இருந்த தோழமை சுபா அவர்களுக்கும், காலஞ்சென்ற வாண்டுமாமா அவர்களுக்கும் எங்களது இருதயத்து நன்றிகள். விழிப்பார்வையில்லாத குழந்தைகள் விரல்தடவி வாசிக்கும் அந்நற்கணம், இதன் பின்னாழ்ந்த அத்தனை நெருக்கடிகளையும் மறக்கச் செய்துவிடுகிறது.
தும்பி இதழின் ஒவ்வொரு முயற்சிக்கும் தொடர்ந்து துணைநின்று, தமிழில் இச்சாத்தியம் தொடர்ந்து நிகழ கரங்கொடுக்கும் தோழமைகள் அனைவரையும் அன்புடன் அரவணைத்துக் கொள்கிறோம். பிறர்க்கானதாக மாறுகையிலேயே பிரார்த்தனைகள் நிறைவேறத் துவங்குகின்றன.
தும்பிக்காக படைப்பளித்த ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள், கதை மொழிபெயர்ப்பாளர்கள், கட்டுரையாளர்கள், அச்சகத்தினர் என அனைவருக்கும் அன்பின் பெருநன்றிகள்! தொடர்ந்து துணையிருங்கள்!
Children’s magazine ‘Thumbi’ brings out braille stories for visually-impaired readers in Tamil Nadu and Sri Lanka
Stories from Thumbi, a bilingual children’s magazine, are now available in braille, and will be distributed at 60 schools for the visually-impaired in Tamil Nadu and Sri Lanka
Be the first to leave a comment