பிரெயில் அழைப்பிதழ்

பிரெயிலில் ஓர் அழைப்பிதழ்

,வெளியிடப்பட்டது

இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும்

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

எதிர்வரும் பிப்பரவரி 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இனிய நண்பர் செல்வன். பாலகிருஷ்ணன் மற்றும் அன்புத் தங்கை செல்வி. ஷியாமலா இருவரும் இருமனம் கொண்ட திருமண உறவில் இணையவிருக்கிறார்கள். இந்த நன்னாளுக்கான அழைப்பிதழை அவர்கள் தங்களின் பார்வையற்ற நண்பர்களுக்காக பிரெயிலிலும் அச்சடித்து வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு அச்சு அழைப்பிதழில் நிகழ்விடங்களை எளிதில் அறிய QR code முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனக்குத் தெரிந்தவரை திருமண அழைப்பிதழை பிரெயிலில் முதன்முதலில் அச்சடித்து வழங்கியவர்கள் திரு. பாண்டியராஜ் மற்றும் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜ் தம்பதிகள்தான். அதன்பிறகு நண்பர் திரு. பாலகணேசன் அவர்கள் தன் திருமண அழைப்பிதழை பிரெயிலிலும் அச்சடித்துவழங்கினார். இப்போது இவர்களும் அதே பெருமித செயலைச் செய்திருக்கிறார்கள். இத்தகைய உணர்வுள்ள பார்வ்ஐயற்றவர்கள் இருக்கும்வரை பிரெயிலும் அதன் மகத்துவமும் என்றென்றும் அழியாமல் காக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கையில் இவர்கள் மீதெல்லாம் ஒருவித பொறாமை ஏற்படுகிறது. என்ன செய்ய? இதற்காக இன்னொரு முறை திருமணம் செய்துகொள்ள முடியாதே என என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.

பாலகிருஷ்ணன் சியாமலா இணைந்த புகைப்படம்
இடது பாலகிருஷ்ணன், வலது சியாமலா
திருமண அழைப்பிதழ்
யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
-- குறுந்தொகை

அன்புடையீர்!
    நிகழும் மங்களகரமான தமிழ் பிளவ வருடம் தை மாதம் 24- ஆம்
தேதி(06.02.2022) ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய
சுபதினத்தில் காலை 07.30 மணிக்கு மேல் 09.30 மணிக்குலாக
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் தெற்கு நல்லிப்பட்டி
தெய்வ திரு. ஆறுமுகம், நலமுடன் கருப்பாயீ இவர்களின் மகன்வழி பேரனும்
தெய்வ திரு சுப்பையா, நலமுடன் லட்சுமி இவர்களின் மகள்வழி பேரனும்
திரு ஆ. மருதமுத்து, பழனியாயீ இவர்களின் மூத்த குமாரன்
திருவளர் செல்வன் மா பாலகிருஷ்ணன் (M.A, B.Ed, M.Phil) என்ற வரனுக்கும்,

சென்னை அசோக் நகர் 37- ஆவது தெரு
தெய்வ திரு. ஜெகநாதன், எல்லம்மாள் இவர்களின் மகன்வழி பேத்தியும்
தெய்வ திரு. ராமசாமி, பாப்பம்மாள் இவர்களின் மகள்வழி பேத்தியும்
தெய்வ திரு. ஜ. கோதண்டபாணி, நலமுடன் கோ.லட்சுமி இவர்களின் இளைய குமாரத்தி
திருவளர் செல்வி. கோ. சியாமளா(M., M.aA), அமைச்சுப்பணி, வேலைவாய்ப்பு
துறை என்ற கன்னிகைக்கும்,
புதுக்கோட்டை பெருங்குடி அருள்மிகு வேண்டிவந்த அம்மன் ஆலயத்தில் திருமணமும்,
அதனை தொடர்ந்து

புதுக்கோட்டை – திருமயம் – ராயவரம் - தெற்கு நல்லிப்பட்டி பழணீ ஆண்டவர்
வழாகத்தில் திருமண விருந்தும்,
16.02.2021 அன்று புதன்கிழமை மாலை 04.30 மணிக்கு மேல் சென்னை
அரும்பாக்கம் எம் எம் டி எ நூறடி சாலையில் உள்ள சுபம் மஹாலில் திருமண
வரவேற்பு விழாவும் நடைபெறவுள்ளது.

மேற்படி மூன்று நிகழ்விர்க்கும் தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ
வருகை தந்து, மனமக்களாகிய எங்களை வாழ்த்த அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம் உங்களின் நல்வரவை எதிர்நோக்கும் மணமக்கள்
மற்றும் மணமக்களின் குடும்பத்தினர்கள்.
பிரெயில் அழைப்பிதழ்

திருமணத்தில் இணையவிருக்கும் இருவருக்கும் சவால்முரசு சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

***

திருமண நிகழ்வு, விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறவிருக்கும் இடங்களுக்கான கூகுல் வரைபடங்களுக்கான இணைப்புகள் கீழே.

பெருங்குடி அருள்மிகு வேண்டிவந்த அம்மன்

ஆலயம்

https://maps.app.goo.gl/a2oQMfpsSCfGkZ1p7

புதுக்கோட்டை – திருமயம் – ராயவரம் – தெற்கு நல்லிப்பட்டி பழணீ ஆண்டவர்

வழாகம்

https://maps.app.goo.gl/TvYP321hz8UxTzjD6

சென்னை அரும்பாக்கம் எம் எம் டி எ நூறடி சாலையில் உள்ள சுபம் மஹால்

https://maps.app.goo.gl/GRhTZCNVSj1wzuoq5

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *