அறிவிப்பு 1குறித்த விவரங்களுக்கு:
78068 57514
அறிவிப்பு 2 பற்றிய விவரங்களுக்கு:
9789800794

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர
அறிவிப்பு 1
நண்பர்களுக்கு கர்ணவித்யாவின் வணக்கம்!
கல்விசார் ஆங்கில எழுத்துத்திறன்களை மேம்படுத்துவதற்காக, நம் அமைப்பானது, “Basics of academic writing” என்ற தலைப்பில் ஆறுநாள் சிறப்புப் பயிற்சியை 22-01-2022 (சனிக்கிழமை) முதல் 29-01-2022 (சனிக்கிழமை( வரை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இப்பயிற்சியின் நோக்கமானது, ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைத் தெளிவாகவும் முறையாகவும் எழுதுவதற்கான திறன்களை அறிமுகப்படுத்துவதே.
• நீங்கள் zoom அல்லது Google meet அணுகத் தெரிந்திருப்பவரா?
• உங்களால் Whats App மற்றும் G-mail பயன்படுத்த முடியுமா?
• கணினி மற்றும் தொலைபேசியை நன்கு கையாளத் தெரிந்திருப்பவரா நீங்கள்?
• உங்களால் எம் எஸ் வேடில் (MS word) முறையே தட்டச்சு செய்ய முடியுமா?
• இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆம் என்பவரா நீங்கள்… உங்களால் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு பதிவுசெய்ய முடியும்.
கீழ்க்காணும் இணைப்பின் மூலம் ஆர்வமுள்ள பார்வையற்ற நண்பர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு:
78068 57514 என்ற தொலைபேசி எண் மூலமாகத் தொடர்புகொள்ளவும்.
பயிற்சி படிவத்திற்கான இணைப்பு:
***
அறிவிப்பு 2
தனியார்த்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா?
தனியார்த்துறையில் உள்ள குறிப்பிட்ட வேலைக்கான திறன்களைப்பற்றிப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு!
C2C, (Campus to Career) எனும் இணைய கருத்தரங்கில் கலந்துகொள்ள வாரீர்!
இந்தக் கருத்தரங்கம் பார்வைக்குறையுடைய பட்டதாரிகள் மற்றும் பணிநாடுவோருக்கு மட்டுமே.
கருத்தரங்கு நடைபெறும் தேதி மற்றும் நேரம்:
ஞாயிறு (23 01 2022) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை.
ஆர்வமுள்ள நண்பர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்துகொள்ளவும்.
பதிவுசெய்த பங்கேற்பாளர்கள் மட்டுமே கருத்தரங்கில் அனுமதிக்கப்படுவர்.
தனியார்த்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க வல்லுநர்களுடன் உரையாட வாருங்கள்!
மேலும் விவரங்களுக்கு:
9789800794
கருத்தரங்கிற்கான படிவ இணைப்பு:
நன்றி.
Be the first to leave a comment