செய்திக்கொத்து 15/01/2022

செய்திக்கொத்து 15/01/2022

,வெளியிடப்பட்டது

பல்வேறு செய்தித்தளங்கள், சமூக ஊடகங்களில் வெளியான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகளின் வாராந்திரத் தொகுப்பு

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

மதுரை அரசு மருத்துவர்கள் முயற்சியால் அறுவை சிகிச்சை மூலம் பேசும் திறன் பெற்ற 163 குழந்தைகள்: ‘டீன்’ முன் பாட்டுப் பாடி, நடனமாடி அசத்தினர்

அரசு ராஜாஜி மருத்துவமனை காது மூக்கு தொண்டை சிகிச்சைப் பிரிவின் மூலமாக பிறவியில் செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு இதுவரை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மூலமாக செவித்திறன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செய்தியை விரிவாகப் படிக்க

பார்வை குன்றியவர்களுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட கூட்டுறவு சங்க சட்ட முன்வடிவு:

கண்பார்வை குன்றிய நபர்கள், உடல் ஊனம் என்பதால் எழுத முடியாதவர்கள் ஆகியோரை பதிவுபெற்ற கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அல்லது நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களாக்கும் வகையில் உரிய திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

செய்தியை விரிவாகப் படிக்க

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி சலுகை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டணசலுகை கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பம் மீது இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை விரிவாகப் படிக்க

சி.பி.எம்: இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வை மாற்றுத்திறனாளி மாவட்டச் செயலாளராகத் தேர்வு!

சி.பி.எம் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக முதன்முறையாக 100 சதவிகிதம் பார்வை மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

செய்தியை விரிவாகப் படிக்க

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்