பல்வேறு செய்தித்தளங்கள், சமூக ஊடகங்களில் வெளியான மாற்றுத்திறனாளிகள் தொடர்பான முக்கிய செய்திகளின் வாராந்திரத் தொகுப்பு
கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

அரசு வேலைவாய்ப்புக்காக 73 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்
அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 73 லட்சத்து 30 ஆயிரத்து 302 பேர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 871 பேர்.
இலவசமாக மஞ்சள் பை வழங்கிய மாற்றுத்திறனாளி
பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பயன்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் ‘மீண்டும்மஞ்சப்பை’ என்ற சிறப்பான திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகம்செய்துள்ளார். இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மஞ்சள் பைகளை தயாரித்து மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்துள்ளார் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டண விலக்கு: சென்னைப் பல்கலை அறிவிப்பு
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்வழி சான்று பெறுவதற்கான கட்டணத்தில் இருந்து அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்னை பல்கலைக்கழகம் விலக்கு அளித்துள்ளது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் பார்வை குறைபாடுள்ளோருக்கு ஸ்மார்ட் போன்
மதுரை அரவிந்த் கண் காப்பு அமைப்புடன், விஷன்-எய்ட் நிறுவனம் இணைந்து பார்வைக் குறைபாடுள்ள நபர்கள், மாணவர் களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்வு: மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையினை ரூ. 1500லிருந்து 2000ஆக அதிகரித்து முதல்வர் மு.கா. ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதனைப் பல்வேறு மாற்றுத்திறனாளி அமைப்புகள் வரவேற்றிருக்கின்றன.
Be the first to leave a comment