பணியிட மாறுதலிலிருந்து விலக்குபெறும் அரசு ஊழியர்கள்: முழு விவரம் என்ன?

பணியிட மாறுதலிலிருந்து விலக்குபெறும் அரசு ஊழியர்கள்: முழு விவரம் என்ன?

,வெளியிடப்பட்டது

பொதுவாக, விருப்பப் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர் ஒருவர், தற்போதைய பணியிடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்

சர்க்கர நாற்காலிப் பயனாளரின் பாதுகாவலர்

நீங்கள் தமிழக அரசு ஊழியரா?  உங்கள் குடும்பத்தில் இருக்கிற மகன்/மகள், பெற்றோர்/சகோதர சகோதரிகளில் எவரேனும் மாற்றுத்திறனாளியா? அவர்களின் பாதுகாவலர் (care-giver) நீங்கள் என்றால், உங்களுக்கு தமிழக அரசின் நிர்வாக ரீதியிலான பணியிட மாறுதல் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு வழங்கப்படும். இதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 2(R)ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உரிய சான்றளிக்கும் அலுவலரிடமிருந்து உங்கள் மகன்/மகள், பெற்றோர்/சகோதர சகோதரிகள் மாற்றுத்திறனாளிகள் என்ற சான்றினைப் பெற்று, நீங்கள் அரசால் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதல் நடவடிக்கைகளிலிருந்து விலக்கு பெறலாம்.

பொதுவாக, விருப்பப் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் அரசு ஊழியர் ஒருவர், தற்போதைய பணியிடத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் பணியிட மாறுதல் விதியாகும். கடந்த 1994 ஆம் ஆண்டு அரசால் வெளியிடப்பட்ட கடிதத்தின்படி, மனவளர்ச்சி குன்றிய அல்லது ஊனமுற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோருக்கு இந்த விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டதோடு, ஐந்தாண்டுகளுக்கு அவர்கள் ஒரே இடத்தில் பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/பெற்றோர்/உடன்பிறந்தோரைப் பராமரிக்கும் (care-givers) அரசு ஊழியர்களுக்கு நிர்வாக ரீதியிலான பணியிட மாறுதல் நடவடிக்கையிலிருந்து முற்றிலும் விலக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசாணையைப் பதிவிறக்க:https://drive.google.com/file/d/1Y7duZGd_p7iqkLtTy4yMBldpE2vmQgVy/view?usp=sharing

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *