graphic டாராடாக் லோகோ

டாராடாக் அறிக்கை: 19.11.2021

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி
நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்

graphic டாராடாக் லோகோ

மாற்றுத்திறனாளிகள் உலக தினம் முன்னிட்டாவது உதவித்தொகை உயர்த்தக் கோரி

நவ-30 மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான  மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை புதுச்சேரி மாநிலத்தில் 40% ஊனம் உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,800/- தெலுங்கானாவில் ரூ.3,016/- என அண்டை மாநிலங்களில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.   “தமிழகத்திலும் இதே அளவு உதவித்தொகை வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.5,000/- வழங்க வேண்டும்” என்பது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கோரிக்கையாகும்.  இதற்காக கடந்த பல ஆண்டுகளாகவே தீவிரப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம்

தமிழகத்தில் மே மாதம் பொறுப்பேற்ற திமுக அரசு ரூ.1,000/-ல் இருந்து ரூ.1,500/- ஆக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தப்படும் என தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது.     ஆனால், 6 மாதங்களாகியும் உதவித்தொகையை உயர்த்தாதது அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மத்தியிலும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.  வேலை இழப்பு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின்  காரணமாக மாற்றுத்திறனாளிகளுடைய குடும்பங்கள் துயருடன் தவிக்கின்றன.

டிச-3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம்

மாற்றுத்திறனாளிகளின் உலக தினம் டிச-3 ஆம் தேதி வரவிருக்கிற நிலையில், அதை முன்னிட்டாவது அரசு “தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று குறைந்தபட்சம் ரூ.3,000/- கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5.000/- ஆக உதவித்தொகையை உயர்த்த  வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கோருகிறோம்.

நவ-30 மாநிலம் முழுவதும் மறியல்

இக்கோரிக்கையை வலியுறுத்தி நவ-30 செவ்வாய் கிழமை மாநிலம் முழுவதும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மையங்களில்மாற்றுத்திறனாளிகளை பெருந்திரளாக திரட்டி மறியல் போராட்டங்களை நடத்த எமது சங்கம் முடிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நியாயமான இக்கோரிக்கையை அரசு ஏற்க வலியுறுத்தும் வகையில் இப்போராட்டத்திற்கு  அனைத்து ஜனநாயக சக்திகளும்  ஆதரவளிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.

(B. ஜான்ஸிராணி)                                           (எஸ். நம்புராஜன்)

மாநில தலைவர்                                                  பொதுச்செயலாளர்

— 

S. NAMBURAJAN

State General Secretary, Tamilnadu Assn for the Rights of

All Types of Differently Abled & Caregivers – TARATDAC

No.1, 1st Street,

Chinnaiya Garden,

East Jones Road,

Saidapet, 

Chennai 600015.

Ph:044-42119826 

Mobile: 9444295994

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்