கடவுள் அமைத்த மேடையோ?

,வெளியிடப்பட்டது

கடவுள் அமைத்துவைத்த மேடையோ?

அண்மையில் வெளிவந்திருக்கிற நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ‘வாசாமி’ என்ற பாடலை மூவர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அவர்களுள் இருவர் பார்வையற்றவர்கள். ஒருவர் ஏற்கனவே நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் ‘உன் கூடவே பொறக்கணும்’ என்ற பாடல் புகழ் திருமூர்த்தி. மற்றொருவர் கருணாஸ் நடித்துத் தயாரித்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலான ‘ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்’ பாடலைப்பாடிய மேடையிசைப் பாடகர் சம்சுதீன்.

திருமூர்த்தி சமீபத்திய பிரபலம். ஆனால், சம்சுதீன் பார்வையற்றவர்களிடையே ஏற்கனவே பிரபலமானவர். கடவுள் அமைத்துவைத்த மேடை என்ற அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் பாடலில் வரும் பலகுரல் பகுதிகளையும் அவரே செய்தபடி அந்தப் பாடலை அவர் பாடுவார்.

இந்த இணைப்பிலும் கூட தனக்குள் இருக்கிற ஒரு திறமையை மிக எளிமையாக வெளிக்காட்டுகிறார் சம்சுதீன். அதாவது ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை எதிரொலிப்பொலி  (eco sound) கொடுத்தபடி பாடும் சுவாரசியமான வித்யாசமான முறையில் அவர் பாடுவது ரசிக்கும்படி இருக்கிறது.

இருவருக்கும் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் D. இமான் நன்றிக்குரியவர்.

இருவரின் எதிர்காலமும் சிறக்க வாழ்த்துகள்.

***ப. சரவணமணிகண்டன்

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *