graphic டாராடாக் லோகோ

AAY அட்டைகளாக மாற்றுவதில் மாநிலத்தில் நிலவும் சுணக்கம்: முதல்வர் தலையிட டாராடாக் கடிதம்

,வெளியிடப்பட்டது

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஒரு விண்ணப்ப படிவம் தயாரித்து, மேற்கண்ட ஒன்றிய அரசு உத்தரவு நகலையும் இணைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்

graphic டாராடாக் லோகோ

நடுவண் அரசின் பரிந்துரையை ஏற்று, அந்தியோதயா அன்ன யோஜனா அட்டையாக மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையை மாற்றுவது தொடர்பான நடவடிக்கையில் மாநிலத்தில் சுணக்கம் நிலவுவதாகவும், உடனடியாக முதல்வர் தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான நலச்சங்கம் டாராடாக் முதல்வருக்குக் கடிதம் எழுத்இயுள்ளது.

அந்தக் கடிதத்தில், “மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் பாதிப்புக்குள்ளாகும் பிரிவினர் என்பதால், 2013 தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப்படி அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் அந்த்யோதயா அன்ன யோஜனா-AAY திட்டத்தின் கீழ் இணைத்து, குடும்ப அட்டைகளை மாற்றி வழங்க” மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

நடுவண் அரசின் உத்தரவுக் கடிதத்தைப் படிக்க மற்றும் பதிவிறக்க

அந்த உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி 15.01.2021 அன்று அப்போதைய அதிமுக அரசுக்கு எமது சங்கம் கோரிக்கை வைத்தது.

அரசு நிர்ணயித்துள்ள எண்ணிக்கையால் சிக்கல்

தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் ஒரு விண்ணப்ப படிவம் தயாரித்து, மேற்கண்ட ஒன்றிய அரசு உத்தரவு நகலையும் இணைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.  ஆனால், மாவட்டங்களில்  AAY குடும்ப  அட்டைகளாக மாற்றித்தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.

மாவட்ட வழங்கல் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளை எமது சங்கத்தின் சார்பில் தொடர்புகொண்டு கேட்கிறபொழுது, “AAY குடும்ப  அட்டைகள் அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள்தான் வழங்க முடியும்.   இத்திட்டத்தில் புதிதாக குடும்ப அட்டை வழங்க வேண்டுமெனில், ஏற்கனவே உள்ளவர்களை நீக்கிதான் வழங்க முடியும்.   இதற்கு மேல் அதிகாரிகள் ஒப்புதல் வேண்டும்.  எனவே, மனுக்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுங்கள், சென்னைக்கு அனுப்புகிறோம். அங்கிருந்துதான் மாற்றிக்கொடுக்க வேண்டும்” என உயர் அதிகாரிகளை கைகாட்டுகின்றனர்.

முதல்வர் உத்தரவிடக் கோரிக்கை

இதன் காரணமாக, ஒன்றிய அரசு உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும் தமிழகத்தில் உள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகளை AAY குடும்ப  அட்டைகளாக மாற்றி வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர்,

எனவே,  இவ்விஷயத்தில் தலையிட்டு, மாவட்ட அதிகாரிகள் கூறுவதில் உண்மை இருக்கும்பட்சத்தில், மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைகளை AAY அட்டைகளாக மாற்றி வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *