அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

,வெளியிடப்பட்டது

போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

Page number 1
Description:
கருணாநிதி, சி. என். அண்ணாது, எம். கே. ஸ்டாலின் மற்றும் அல் போன்றது. ஒரு புகைப்படத்திற்கான posing
Text:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கிணங்க , இன்று ( 18.8.2021 ) தலைமைச் செயலகத்தில் , மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
முனைவர் க.பொன்முடி அவர்களை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து , அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றிட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள் . மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அக்கோரிக்கையினை உடனே நிறைவேற்றும் பொருட்டு , கல்லூரிக் கல்வி இயக்குநர் வாயிலாக அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப ஆவன செய்வதாக தெரிவித்தார் . உடன் உயர்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா . கார்த்திகேயன் இ.ஆ.ப. , அவர்கள் உள்ளார் .

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அரசுக்கு எத்தகைய நிதிச் சிக்கல்கள் இருந்தாலும், சமூகநீதிக்கே முதல் முன்னுரிமை என்று தனது ஆட்சிக்காலத்தை அர்ப்பணித்திருக்கிறார் மாண்புமிகு தமிழக முதல்வர். அவருக்கு பார்வையற்றோரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இது ஒரு புதிய தொடக்கம். இனிவரும் காலங்களில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடு பணி கண்டிப்பாக ஒதுக்கப்படும் என்ற வரலாற்று வாசலை திறந்து வைக்கப் போராடிய அனைத்து பார்வையற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்