அன்புமலர் பூத்தது, ஓர் அறைகூவல் நாளில்

,வெளியிடப்பட்டது

இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.

உதயநிதி ஸ்டாலினுடன் சங்க நிர்வாகிகள்
உதயநிதி ஸ்டாலின் உடன் சங்க நிர்வாகிகள்

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ. 110500 வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை முன்னெடுத்த சங்கப் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா மற்றும் பொதுச்செயலாளர் திரு. மணிக்கண்ணன் அவர்களுக்க்உம், சங்கத்தின் இத்தகைய முயற்சியில் தங்கள் பங்களிப்பைச் செலுத்திய சங்கம் சார் மற்றும் சாராதஒவ்வொருவருக்கும்  வாழ்த்துகள்.

“எங்கள் போராட்டத்தைத் தற்காளிகமாக ஒத்திவைக்கிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லையென்றால், ஜூலை 5ஆம் தேதிக்குப் பிறகு நாங்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம்.” கடந்த பிப்பரவரி 17 தொடங்கி மார்ச் 1ஆம் தேதிவரை நடைபெற்ற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்டத்தின் இறுதிநாளில் இப்படித்தான் அறிவித்தார் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் திரு. அரங்கராஜா. ஆனால், அதே ஜூலை ஐந்தாம் நாள் பொதுச்சமூகத்தின் துயர் துடைக்கும் அரசின் முயற்சிக்குத் தங்களால் இயன்ற அளவில் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் சங்கத்தினர்.

அவர்களின் ஒவ்வொரு கோரிக்கையும் அரசால் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும். “உங்களின் கோரிக்கைகளை முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே நாங்கள் முன்வைப்போம்”என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குறுதிகளுக்கேற்ப அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரிலேயே அதுபற்றி அரசின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். பத்தாண்டுகளாக பார்வையற்றோருக்கு மறுக்கப்பட்ட பணிவாய்ப்புகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

ஓர் அறைகூவல் நாள் அன்பின் உரையாடல்கள் தொடங்கும் நாளாக மாறியதன் மூலம், புதிய நம்பிக்கைகளைத் தோற்றுவித்திருக்கிறது நேற்றைய ஜூலை 5.

அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளும், வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

***

ப. சரவணமணிகண்டன்

களம்: விளிம்பிலிருந்து மையம் நோக்கி ஒரு வெற்றிப்பயணம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்