“தலை போகாதென்றால், தலைவலி பரவாயில்லை”. ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் தடுப்பூசி அனுபவம்

மோசஸ்ராஜ்
மோசஸ்ராஜ்

சவால்முரசு வாசகர்களுக்கு வணக்கம் !

கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், நான் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அனுபவத்தை சற்று பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.

பல வகையான அச்சங்களை நம் மக்கள் போற போக்கில் சொல்லி விட்டு சென்றாலும், அவை எதுவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டது இல்லை என்பதை நாம் முதலில் நினைவில் கொள்ளவேண்டும். தடுப்பூசி ஒன்றே நம் கையில் உள்ள பெரும் ஆயுதமாய் திகழ்கின்றது. அதனால் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் என் அனுபவங்களை இங்கு பதிவிடுகிறேன்

ஜூன் மூன்றாம் தேதி காலை பதினோரு மணி அளவில் நான் கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டேன். முதலில் நான் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு எத்தகைய வலிகளும் ஏற்படவில்லை. ஆனால் பிறகு மாலை ஆக ஆக சற்று காய்ச்சல் அடிக்க தொடங்கியது.

சூரியன் உதித்த நாளிலே, என் உடலுக்குள் ஒரு சூரியன் உதித்ததுபோல் ஒரு காய்ச்சல். இணைந்தே தலைவலியும் என்னை பாடாய் படுத்த தொடங்கிவிட்டது.

தலைவலியோடு கடந்து செல்லும் என்று காத்திருந்த எனக்கு மேலும் பெரும் சுமையாய் உடல் வலியும் ஏற்பட தொடங்கியது.

இது சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று காத்திருந்த நான் இரவு முழுவதும் தூக்கத்தையும் தொலைத்துவிட்டேன். எப்படியும் இதனை தெர்மா மீட்டர் போன்ற கருவிகளில் அளந்து பார்த்து இருந்தாள், ஏறக்குறைய 103d முதல்105d  வரை காய்ச்சல் இருந்திருக்கக்கூடும்.

 தலைவலியைக் குறித்துச் சொல்வதென்றால், நாம் தானேபோய் சுவர்களில்  மோதிக்கொண்டால் எப்படி இருக்குமோ அதைவிட பயங்கரக் கொடுமைகளைத்தான் அந்நேரத்தில்நான் அனுபவித்தேன்.

நான் அந்தக் காய்ச்சலோடு, முப்பது மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட நேரம் போராடினேன்.

ஜூன் 5ஆம் தேதி காலைதான் மெல்ல உடல் நலம் பெற்று வந்தேன்.

இதையெல்லாம் உங்களை அச்சப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் சொல்ல வரவில்லை.

ஒருவேளை நீங்களும் தடுப்பூசி எடுத்த பிறகு இத்தகைய ஒரு வேதனைகள் இருந்தால் அதைக் கண்டு யாரும் பயந்து விட வேண்டாம் என்ற நோக்கத்திலேயே பதிவிடுகிறேன். அதுமட்டுமல்ல, மனிதர்கள் ஆகிய நாம் இன்னொருவரை   சார்ந்தே காலம் முழுவதும் இருக்க வேண்டியிருக்கிறதே!

நீங்கள் தடுப்பூசி எடுத்தபிறகு, உங்களைக் கண்டு உங்கள்  வீட்டில் உள்ளவர்கள் பயப்படும் பொழுது அவர்களுக்கு இந்தச் சூழலை எடுத்துரைத்து அவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். ஏனென்றால், தடுப்பூசி என்பது கொரணாவை  அழிக்கும் ஆயுதம் என்றாலும் முழுமையாக அதனை அழித்துவிட முடியாது.

 நூற்றில்  ஒரு பத்து பேருக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் மீண்டும் இந்த கொடும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படி நீங்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டு நம் வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமல் வெளியில் பயணங்களை மேற்கொண்டு வரும் பொழுது அவர்களுக்கு அந்தக் கொடும் தொற்று தொற்றிக்கொண்டால்! அவர்களின் மூலம் நமக்கு தொற்று தொற்றிக்கொண்டால், என்ன செய்வது?

ஒருநாள் காய்ச்சளுக்கே எனக்கு இவ்வளவு துன்பங்கள் என்றால்,

ஒருவேளை இந்தக் கொடும் தொற்று தொற்றி நான் தீவிர சிகிச்சைப் பிரிவிலோ     அல்லது உயிர்வளி பற்றாக்குறை போன்ற நிலைமையோ எனக்கு ஏற்பட்டிருந்தால் எத்தகைய சிரமங்களை நான் மேற்கொள்ள நேரிட்டிருக்கும்  என்று சற்று நினைத்துப் பாருங்கள். அதனால் தயவு செய்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அச்சமின்மைதான் நம்முடைய முதல் ஆரோக்கியம்…

நோயைக் கண்டு  பயப்படாதீர்கள். பயம்தான் மிகப்பெரிய நோய்.

பிறருக்கு நேர்ந்தது நமக்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயம்தான் நம்மை நோயில் ஆழ்த்தும்.

பயப்படுவதைவிட பாதுகாப்போடு இருங்கள்!

பொது முடக்கம் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக என்பதை உணர்ந்து வெளியில் செல்லாதிருப்போம். தவிர்க்க இயலாத நேரங்களில் செல்லும்போது மிகக் கவனமாக முகக்கவசம் அணிந்து பத்திரமாக சென்று வாருங்கள்.

நாளை எல்லோரும்

ஒன்றாய் வாழ

நன்றாய் வாழ

விலகி இருப்போம்,

விழித்திருப்போம்.

வெல்வோம் கொரோனாவை

வாழ்வோம் நோயின்றி.

எடுத்துக்கொள்வோம் தடுப்பூசியை…

முகத்தில் அணிவோம் முக கவசத்தை.

***

U. மோசஸ்ராஜ்

கட்டுரையாளர் காரைக்காலைச் சேர்ந்தவர். இளங்கலைக் கல்வியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

தொடர்புக்கு: umosesrajbabl2001@gmail.com

“அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

சவால்முரசு

2 thoughts on ““தலை போகாதென்றால், தலைவலி பரவாயில்லை”. ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் தடுப்பூசி அனுபவம்

  1. உங்களைப் போன்றவர்களின் அனுபவம் எல்லோருக்கும் மன தைரியத்தை அளிக்கட்டும்

    Like

  2. மிக அருமையான பகிர்வு! இதன் பல பேர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். “பயம்தான் கரோனாவை விட கொடிய நோய்” – 100% உண்மை. சபாஷ்! சவால் முரசு நன்றாக வளரும்👍

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s