ரொம்ப நன்றி சார். காலச்சூழலுக்கு உகந்த பதிவைக் கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற காலகட்டங்களுக்கு தயாரிக்கக்கூடிய வளைதளங்களாக இருக்கட்டும், அல்லது நிரந்தரமாகக் குறிப்பிட்ட அலுவல் சார்ந்த வலைதளங்களாக இருக்கட்டும் இவைகளை அரசாங்கம் ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்து அதைச் செய்கிறார்கள். இதுபோன்ற சூழலில் அரசுக்கும் அந்த நிறுவனத்துக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டும் அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையில் நாமும் இருக்கிறோம்.
கட்டுரையில் நீங்கள் சொல்லியிருக்கிற accessibility tester பணிக்கான நபரை நிறுவனம் நியமிக்காமல் அரசே நியமிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவருக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான செயல்பாடுகளை அரசு கண்காணிக்க வேண்டும்.
இது இப்போதைய தீர்வாக இருக்கமுடியும். தொலைநோக்கில் பார்த்தால், அரசாங்கமே இதற்கென்று ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதில் பணியாட்களை நியமித்து இணையதள வடிவமைப்பு உள்ளிட்ட அரசு தொடர்பான தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால், மூன்றாம் நபர் தலையீடு இருக்காது.
என்னதான் நாம் தனியார் நிறுவனங்களிடம் மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாக நமது குறைகளைச் சொன்னாலும், அவர்களுக்கு அது புரிவதே இல்லை. நிறைய நிறுவனங்களுக்கு திரைவாசிப்பான் குறித்தே தெரிவதில்லை. இன்னோரு பிரச்சனை என்னவென்றால், ஒரு அரசு மாறும்போது, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இதுபோன்ற ஒப்பந்தங்களும் வேறுஒரு நிறுவனங்களுக்கு மாறுகிறது. எனவே, மீண்டும் நாம் அவர்களுக்கு முதலிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால் புதிய தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகிறது.
அதனால், அரசாங்கமே மென்பொருள் கட்டமைப்பை ஏற்படுத்துவதே இதற்கு சரியான தொலைநோக்கு தீர்வாக இருக்க முடியும்.
***
முத்து நாகராஜ்
Soopper sir.