தமிழக அரசால் நேற்று 21 ஐஏஎஸ்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள், சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராகப் பணியாற்றிவரும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. விஜயராஜ்குமார் ஐஏஎஸ் அவர்களுக்குப் பதிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த லால்வீனா ஐஏஎஸ்?
44 வயதாகும் திரு. R. லால்வீனா ஐஏஎஸ் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2001 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த இவர், தமிழகத்தில் பணிக்குச் சேர்ந்து கடந்த 2009 ஜூலை மாதம், தமிழக அரசால் மாற்றுப்பணியில் மிசோரம் அனுப்பப்பட்டார். பின்பு, 2015 ஜூன் மாதம் சமூகப் பாதுகாப்புத்துறையின் ஆணையராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் என்பவர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஒதுக்கியிருக்கும் நிதியைப் பிரித்து வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருதல் போன்ற இன்றியமையாத பணிகளையும் பொறுப்புகளையும் கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். எனவே, துறையின் ஆணையரகம் மற்றும் செயலகத்துக்கிடையே நல்ல புரிதலும், ஒருங்கிணைப்பும் இருத்தல் அவசியம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை வைத்திருக்கும் இத்தகைய வரலாற்றுத் தருணத்தைப் பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதே, புதிதாகப் பணி ஏற்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலரிடம் மாற்றுத்திறனாளிகள் கொண்டுள்ள எதிர்பார்ப்பு.
புதிதாகப் பொறுப்பேற்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது சவால்முரசு.
Be the first to leave a comment