அன்பு்ள மாற்றுத்திறனாளி தோழமைகளே!
எதிர்வரும் 6 ஏப்ரல் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றிட அன்புடன் வேண்டுகிறது சவால்முரசு. அத்துடன், தங்களது வாக்கு செலுத்திய அனுபவங்களை நீங்கள் விரும்பினால் எங்களுடன் பகிரலாம். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களின் அணுகுமுறைகள், நீங்கள் வாக்குச் செலுத்திய அந்தப் பெருமிதத் தருணம் என ஏப்ரல் ஆறு செவ்வாய்க்கிழமை உங்கள் கள அனுபவம் எதுவாகினும் சொல்லுங்களேன்.
நீங்கள் பகிர விரும்பும் உங்கள் அனுபவத்தை, சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலோ, அல்லது, 9789533964 என்ற எண்ணிலோ, குரல்ப்பதிவு அல்லது எழுத்து வடிவிலோ வழங்கலாம்.
மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர், mail@savaalmurasu.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
ஏப்ரல் 6 காலை 7 மணி முதல், அன்று இரவு 10 மணி வரை.
அனைவரும் அறிய, அனுபவம் பகிர்வோம்.