தமிழகத் தேர்தல் 2021: திமுக தேர்தல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பற்றி பேச்சே இல்லை

,வெளியிடப்பட்டது

மாற்றுத் திறனாளிகளுக்கும் , அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படும்.

கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட திமுக கொடி
திமுக கொடி

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கை மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இன்று பிற்பகல் வெளியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் உதவியாளர் ஒருவருடன் மாநிலம் முழுவதும் சென்றுவர இலவச பயணச்சலுகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றது. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பது ஏமாற்றமே. திமுகவின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்த பிற அம்சங்கள் இதோ!

மாற்றுத்திறனாளிகள் நலன்

திமுகவின் சின்னமான உதயசூரியன்
திமுகவின் சின்னம்

290. மாற்றுத் திறனாளிகள் சட்டம் ( 1995 ) ன் அடிப்படையில் , மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான கொள்கைகளை உருவாக்கவும் , அவற்றைச் செயல்படுத்துவதைக் கண்காணிக்கவும் , மாநிலங்கள் தோறும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். ஆனால் , சட்டப்படியான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் குழு அமைக்கப்படவில்லை. தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுவதோடு , அரசு வழங்கும் சலுகைகளை அதிகமானவர்கள் பெற்றுப் பயனடையும் வகையில் மாற்றுத் திறனாளிகள் சலுகைக்கான குறைபாடுகளை 60 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

291. மாற்றுத் திறனாளிகளுக்கும் , அவர்களுடன் செல்லும் ஓர் உதவியாளருக்கும் தமிழக அரசின் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்கப்படும்.

292. மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்கப்படும்,

293. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.

294. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள 4 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

295. அரசு அலுவலகங்கள் , கல்வி நிலையங்கள் , மருத்துவமனைகள் , பேருந்து நிலையங்கள் போன்ற அனைத்துப் பொது இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் சாய்தள ( சுஹஆஞ ) வசதிகளும் , கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படும்.

296. மாற்றுத் திறனாளிகளுக்குச் சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் ( ஐடிஐ) பயிற்சி வழங்கப்பட்டுத் தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.

297. அரசு வீட்டு வசதி மற்றும் குடிசைமாற்று வாரிய வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

***

2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: மனங்களைப் பிரதிபளிக்கும் தேர்தல் அறிக்கை

பகிர

27 thoughts on “தமிழகத் தேர்தல் 2021: திமுக தேர்தல் அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் அரசியல் பங்கேற்பு பற்றி பேச்சே இல்லை

  1. Pingback: canadian cialis
  2. Pingback: cialis from canada
  3. Pingback: aonubs.website2.me
  4. Pingback: canadadrugs

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்