முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு: ஆதரவும் வாழ்த்துகளும்

,வெளியிடப்பட்டது

Phd பட்டம் பெற்றது,
கல்லூரியில் பாடம் நடத்தவா…?,
இரயிலில் மிட்டாய் விற்கவா…?

திருமாவளவனும் உண்ணாவிரதத் தியாகிகளும்
பழச்சாறு கொடுத்து உண்ணா நோன்பை முடித்துவைக்கும் தொல். திருமாவளவன்

கடந்த மார்ச் முதல் தேதியன்று பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தனது போராட்டத்தைத் தாற்காளிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதத் தியாகிகளான திரு. ராம்குமார், திரு. அரவிந்த் மற்றும் திரு. ரவிச்சந்திரன் ஆகியோருக்குப் பழச்சாறு கொடுத்து அவர்களது எட்டுநாள் உண்ணா நோன்பை முடித்துவைத்தார். போராட்டம் தொடர நேர்ந்தாலும் உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுகோளாக இருந்தது. அதனால் சங்கத்தின் முடிவு பதட்டத்தில் இருந்த அனைத்து நலவிரும்பிகளுக்கும் ஒரு மன நிறைவை அளித்தது என்றே சொல்லலாம்.

17.பிப்பரவரி 2021 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய போராட்டம் நாள்தோறும் புதுப்புது உத்திகளுடன் வீரியம் பெற்றது. தனிநபர் மற்றும் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரிடையே போராட்டம் தார்மீக ஆதரவைப் பெறத் தொடங்கியது. ஒருவேளை போராட்டம் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட்டிருந்தால் அது டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தைப் போல வீரியம் பெற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பல்வேறு முறைகேடுகளைத் தோலுரித்திருக்கக்கூடும். உண்மையில் நலத்துறைக்கு இப்போது மறுவாழ்வளித்திருப்பது தேர்தல் ஆணையம்தான். நடந்த போராட்டத்தைக் கூட வந்து பார்க்காத நலத்துறை அதிகாரிகளின் அன்றாட அலுவல்கள் யாருக்கு நலம் சேர்க்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறது போராட்டம்.

பொராட்ட களத்திலிருந்த பொறுப்பு தலைவர் தொடங்கி, உறுப்பினர்கள்வரை அனைவருமே தடம்மாறாமலும்,தடுமாறாமலும் சொன்ன ஒரேவாக்கியம்,பள்ளிக்கல்வித்துறை,உயர்கல்வித்துறைஎன பிற துறைகளில் நம் மீது காட்டப்படும் அக்கறையில் அணு அளவுகூட  நம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இல்லை என்பதைத்தான்

இன்றைக்கும் கூட அதுவேதான் உண்மையாகியிருக்கிறது. இதோ! பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் முன்னெடுக்கும் மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. மாற்றுத்திறனாளிகளுக்கெல்லாம் தாய்த்துறை என்று தங்களைத்தாங்களே மார்தட்டிக்கொள்ளும் துறை என்ன சாதித்தது? சொந்தத் துறையாலே நமது பணிவாய்ப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள இயலாத நிலையில், பல்வேறு ஜனநாயக அமைப்புகள் வழியே பார்வையற்றோராகிய நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் போற்றுதலுக்குரிய முயற்சியை முன்னெடுத்திருக்கும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்திற்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது அன்பையும் ஆதரவையும் என்றும் வழங்கக் காத்திருக்கிறது.

கருத்தரங்க அறிவிப்பு
கருத்தரங்க அறிவிப்பு

• Phd பட்டம் பெற்றது,

      கல்லூரியில் பாடம் நடத்தவா…?,   

      இரயிலில் மிட்டாய் விற்கவா…?

“மாற்றுத்திறனாளிகளின் துயரை கண்திறந்துபார்”

கருத்தரங்கம்

◆ 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி 4% இட ஒதுக்கீடு வழங்கு,

◆ பல ஆண்டுகளாக நிரப்பப்படாத காலி பணியிடங்களை (Back Logs Vaccancies) உடனே நிரப்பு!!

◆ TET/NET/SLET முடித்த தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு, உரிய பணி நியமனம் வழங்கு!!

◆ தற்காலிக/ வருகை விரிவுரையாளர்களாக (Guest Lecturer) பணிசெய்பவர்களை, பணி நிரந்தரம் செய்!!

★—————–★————–★

தலைமை

வழக்கறிஞர் திரு. சு. ஜிம்ராஜ் மில்ட்டன்

சென்னை கிளை செயலாளர்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC)

சிறப்பு அழைப்பாளர்கள்

நீதிபதி து.ஹரிபரந்தாமன் (ஓய்வு)

சென்னை உயர்நீதிமன்றம்

திரு.எஸ்.பாலன்,மூத்த வழக்கறிஞர்

 கர்நாடக உயர்நீதிமன்றம்

வழக்கறிஞர் மா.வேல்முருகன், உறுப்பினர்

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்

பேராசிரியர். இளங்கோவன்

 வேலூர்

திரு. ஆளூர் ஷாநவாஸ், துணைப் பொதுச்செயலாளர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருமதி. மு.முத்து செல்வி,துணை தலைவர்

All Iindia Confederation for Blind

நேருரை:

டாக்டர்.ராஜா Phd.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் & பட்டதாரிகள் சங்க தலைவர்

★—————–★————–★

தேதி: 11.03.2021

நேரம்: 4.30pm – 7.00pm

இடம்: சென்னை நிரூபர்கள் சங்கம், சேப்பாக்கம்

-மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்-

பகிர

1 thought on “முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு: ஆதரவும் வாழ்த்துகளும்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்