அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்

,வெளியிடப்பட்டது

முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது

அரங்கராஜா
அரங்கராஜா

பிப்பரவரி 17 எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

  1. ஆசிரியர்த் தகுதித் தேர்வில்  (TET) வெற்றிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட அனைத்து பார்வையற்றவர்களுக்கும் உடனடியாகப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
  2. அரசாணை 107 மற்றும் 108ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்க் கல்லூரிகளில் வருகைதரு விரிவுரையாளர்களாகப் பணியாற்றும் பேராசிரியர்களை அரசுக்கல்லூரிகளில்  உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  3. உடனடியாக 100 உதவிப் பேராசிரியர்ப் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
  4. அறிவிக்கப்பட்ட சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கையினை உடனடியாகத் தொடங்கி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களைக் கண்டறிந்து, அதற்கான சிறப்புத் தேர்வுகள் நடத்தி பார்வையற்றவர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

என்கிற பணி வாய்ப்பு தொடர்பான நான்கம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு. அரங்கராஜா வெளியிட்டுள்ள்ள குரல்ப்பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்கிற வழக்கமான கோரிக்கை இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்கு வருபவர்கள் (TET) ஆசிரியர்த் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழைக் கொண்டுவரவேண்டும். பேராசிரியர்ப் பணிக்குக் காத்திருப்பவர்கள் மத்திய மாநில அரசுகளால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, அடுத்தவருக்காகத் தாங்கள் கொண்டுவரும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது” எனவும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார் அரங்கராஜா.

போராட்டம் வெற்றிபெற அனைவரும் வாழ்த்துவோம்.

பகிர

1 thought on “அறிவிப்பு: எதிர்வரும்் புதன்கிழமை ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தகவல்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்