
அன்பு உறவுகளுக்கு வணக்கம்!
விழியின் வழியாய் மட்டுமே எழுத்துக்களை உணர இயலும் என்றிருந்த வேளையில்,
விழியொழியற்றவர்கள் விரல்நுனியில் எழுத்துக்களை உணர இயலும் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்திய, ஒப்பற்ற படைப்பு பிரெய்ல்.
அத்தகைய பிரெயிலின் சிறப்பை, முக்கியத்துவத்தை, வளர்ச்சியை, உணர்த்தவும், மேலதிக பயன்பாட்டை குறித்து சிந்திக்கவும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பிரெய்ல் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, பார்வையற்றவர்களுக்கு பின்வரும் பிரெயில்வழி போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
போட்டிகள் குறித்த அறிவிப்பு:
I. சிறுகதை எழுதுதல் போட்டி
1. தலைப்பு எதுவாகினும் சொந்த படைப்பு கதைகள் மட்டுமே வரவேற்கப்படுகிறது.
2. பிரெயில் பக்கத்திற்கு பனிரெண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
II. கவிதை போட்டி
தலைப்பு
- நான் காணும் உலகம்
- மூவிரு புள்ளியே முதன்மை
பிரெயில் பக்கத்திற்கு ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
போட்டிகள் குறித்த முக்கிய குறிப்புகள்
1. அணைத்து வயது பார்வை மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்.
2. ஆக்கங்களை பிரெயிலில் மட்டுமே எழுதி, சங்க முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
3. போட்டியாளரின் பெயர், தற்போதய நிலை, நேரடி அலைபேசி எந், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
4. ஆக்கங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டிய கடைசி நாள் – 20.12.2020.
5. போட்டியில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாகும்.
6. பதினெட்டு வயதிற்குற்பட்ட குழந்தைகள் இளநிலை பிரிவாகவும், அதற்கு மேற்பட்டவர்கள் முதுநிலை பிரிவாகவும் பிரித்து பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
7. போட்டியில் வெற்றி பெரும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவ்வாறு பரிசுபெறுபவர்களின் விவரம் 03.01.2021 அன்று பிரெயில் தின இணையவழி நிகழ்வில் அறிவிக்கப்படும்.
8. தமிழ் எழுதுதலில் எந்தவித சுருக்கங்களும் Contractions பயன்படுத்துதல் கூடாது.
9. பிரெயில் போர்ட் அல்லது பிரெயில் தட்டச்சுக்கருவியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
10. சிறந்த படைப்புகள் சவால்முரசு மின்னிதழில் வெளியிடப்படும்.
மேற்படி நிபந்தனைகளுக்கு உட்படாது, தாமதமாக பெறப்படும் ஆக்கங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
ஆக்கங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி –
ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்,
கதவு எண் 12
2ஆவது தெரு
டெலிஃபோன் காலனி
ஆதம்பாக்கம் சென்னை 88.
மேலதிகத் தொடர்புக்கு:
செல்வி. சித்ரா: 9655013030
குறிப்பு: உங்கள் ஆக்கங்களை அஞ்சல் செய்தபிறகு, மேற்கண்ட எண்ணைத் தொடர்புகொண்டு அதனைத் தெரிவித்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இன்னும் என்ன யோசனை? இனி
ஆறு புள்ளிகளும் அறிவுத்தீ ஏந்தட்டும்,,
வேறுவழியின்றி அக இருள் நீங்கட்டும்.
இலவச அஞ்சல் என்பதை தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் நன்றி
LikeLike
சரியான ஆலோசனை மிக்க நன்றி.
LikeLike
நிச்சயமாக நானும் மதுரை பங்கெடுத்துக் கொள்வேன்
LikeLike