
கரோனா நிவாரணத்திற்காகத் தொடங்கப்பட்ட அழைப்பு மையத்தின் எண் 18004250111. இதனையே நிவார் புயலால் பாதிக்கப்பட்டு, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் அழைக்கலாம் என தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் காணொளிக் காட்சி மூலம் தங்கள் பிரச்சனைகளைப் பேசி உதவிபெற 9700799993 என்ற எண்ணில் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. எனினும் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை கடைநிலை மாற்றுத்திறனாளிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மாற்றுத்திறனாளிகள்.