
ஏனேபில் இந்தியா நிறுவனத்தால் வேலைவாய்ப்பு தொடர்பான பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பார்வையற்றோருக்கான பாதுகாப்பான அணுகல் தன்மையுடன் கூடிய இண்டக்சன் ஓவன் தயாரிப்பது குறித்த செயல்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சமையல் ஆர்வமுள்ள பார்வை மாற்றுத்திறனாளி தோழர்கள் உங்களுக்கான பாதுகாப்பான, பிறர் உதவியின்றி தானே கையாளக்கூடிய, அணுகும் தன்மை கொண்ட இண்டக்சன் (accessible induction) எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெரிவிக்கலாமே.
பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கூகுல் படிவத்தை நிரப்புவதன் மூலம், அவர்களுடைய திட்டத்திற்கு உங்களது மேலான ஆலோசனைகளை வழங்கலாம். நீங்கள் மட்டுமின்றி உங்கள் பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக தளங்கள் வாயிலாக இந்தப் படிவத்தைப் பரிந்துரைக்கலாம்.