ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

அன்புத் தோழமைகளே! வினாடிவினா போட்டி குறித்த ஒரு முக்கிய அறிவிப்பு:

,வெளியிடப்பட்டது

எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை நாடுனர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை நாடுனர்களுக்காகப் பல்வேறு போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், போட்டித் தேர்வுகளுக்கான ஹெலன்கெல்லர் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்களுக்காக வினாடிவினா போட்டியினை நடத்துவது என முடிவு செய்துள்ளது சங்கம்.

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு

1. ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க போட்டித் தேர்வு பயிற்சி மைய மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

2. நடைபெறும் இடம் –  ஜூம் அரங்கம்

3. நடைபெறும் நாள் – வியாழக்கிழமை 26.11.2020

4. நேரம் – மாலை  07 மணி  முதல் இரவு 09 மணி  வரை. தாமதமாக வருபவர்கள் போட்டிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் 

5. போட்டித் தேர்வுகளில் பெரும்பாலும் கேட்கப்படும் தலைப்புகளிலிருந்தே வினாக்கள் அமைந்திருக்கும்.

6. போட்டியின் வெற்றி தோல்விகளுக்கு நடுவரின் தீர்ப்பே இறுதியானது

7. விருப்பமுள்ள தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை 24.11.2020  அன்று இரவு  09.30   மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்ய  வேண்டும்.

உங்கள் பெயர்களைப் பதிவு செய்ய 9655013030 அல்லது 8056248322 என்ற எண்களைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் எதிர்காலம் சிறக்க, பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற

இணைந்திடுங்கள் போட்டித் தேர்வுகளுக்கான ஹெலன்கெல்லர் பயிற்சி மையத்தில்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்