
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை, நமது உரிமைகளைப்பேசும், இந்த உலகிற்கு நம்மை எடுத்துச் சொல்லும் ஒரு சரியான களமாக படைக்க விழைகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அந்த வகையில், நமது அன்றாட வாழ்வியலை, சமூகம் சார் பிரச்சனைகளை, நம் அகம் சார் ஏக்கங்கள் மற்றும் நிறைவுகளைத் தொகுக்கும் முயற்சியாக கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் இடம்பெறுகின்றன.
I. கட்டுரை போட்டி
தலைப்பு – இயற்கை தந்த சவால் வாழ்வின் சிறகுகளும் சிலுவைகளும், அல்லது ஒருநாள் மட்டும் நான் பார்வை பெற்றால்.
600 வார்த்தைகள் அல்லது 5 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
II. கவிதை போட்டி
தலைப்பு – எனது அகவிழிப் பார்வையில் அழகு என்பது யாதெனில், அல்லது துணையாய் வந்த தொழில்நுட்பத் தோழன்.
150 வார்த்தைகள் அல்லது 1.5 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
முக்கிய நிபந்தனைகள்
1. 18 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத பார்வையற்றவர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும்.
2. ஆக்கங்களை MS Word செயலியில் ஒருங்குறி எழுத்துரு Unicode Font முறையில் தட்டச்சு செய்து, கட்டுரை எனில், essay@savaalmurasu.com
கவிதையெனில், poem@savaalmurasu.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
3. போட்டியாளரின் பெயர், தற்போதய நிலை, நேரடி அலைபேசி எந், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.
4. ஆக்கங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டிய கடைசி நாள் – 23.11.2020 மாலை ஆறு மணிக்குள்
5. போட்டியில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானதாகும்.
6. போட்டியில் வெற்றி பெரும் முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அவ்வாறு பரிசுபெறுபவர்களின் விவரம் 29.11.2020 அன்று மாற்று திறனாளிகள் தின இணையவழி நிகழ்வில் அறிவிக்கப்படும்.
7. சிறந்த படைப்புகள் சவாழ்முரசு மின்னிதழில் வெளியிடப்படும்.
மேற்படி நிபந்தனைகளுக்குட்படாது, தாமதமாக பெறப்படும் ஆக்கங்கள் ஏதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
வாருங்கள்!
கற்பனையின் வழியே கனவுகள் பகிர்வோம்,
உரையாடல் செய்து உரிமைகள் மீட்போம்.
இவள், U. சித்ரா
தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
இணைந்து வழங்குவோர், சவால்முரசு
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
வரவேற்கத்தக்க தலைப்புகள்
LikeLiked by 1 person