ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

அன்புத் தோழமைகளே! ஒரு முக்கிய அறிவிப்பு:

,வெளியிடப்பட்டது

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை, அவர்களின் உரிமைசார் குரல்களை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு, பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க லோகோ

எதிர்வரும் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கியிருக்கிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலை, அவர்களின் உரிமைசார் குரல்களை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தோடு, பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

போட்டித் தேர்வுகளுக்காக நடத்தப்படும் ஹெலன்கெல்லர் பயிற்சி மையத்தின் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டியும், 6 வயதுமுதல் 14 வயதுக்குட்பட்ட பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனித்திறன் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

அத்தோடு, நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை அன்று, 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, நாம் ஒன்றாக ஒரே குரலில் அரசியல் கட்சிகளிடம் முன்வைக்க வேண்டிய சில கோரிக்கைகள் குறித்து தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று உரையாடும் விரிவான கருத்தரங்கை இணைய வழியில் ஒருங்கிணைக்கிறது சங்கம். இறுதியாக, நவம்பர் 29 அன்று கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்புகளுடன் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் இணைய வழியில் கொண்டாடப்பட உள்ளது.

போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தனித்தனியான விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். சங்கத்தின் அனைத்து முயற்சிகள் மற்றும் முன்னெடுப்புகளில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பெருந்திரளாய்ப் பங்கேற்று, தங்களின் மேலான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும்  வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவள், U. சித்ரா

தலைவர்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

ஊடகப் பங்காளன்: சவால்முரசு

நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்