மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.

உடையார்பாளையம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை 37. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். விக்கிரமங்கலத்திலுள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 13ஆம் தேதி இவரது செல்ஃபோனை காணவில்லை. இதையடுத்து தனது வங்கிக் கணக்கை முடக்குவதற்காக நிர்வாகத்தினரிடம் தொடர்புகொண்டபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 6.29 லட்சம் பணம் மொபைல் பேங்கிங் மூலம் அபேஸ் செய்யப்பட்ட விவரம் தெரியவந்ந்தது. அதிர்ச்சியடைந்த அவர், விக்கிரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வந்தனர்.
இதையடுத்து அந்த நபர், அபேஸ் செய்த மொத்தப் பணத்தையும் அவரது வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்தினார். இருப்பினும் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக வசிக்கும் பார்வையற்ற பட்டதாரி ஆசிரியருக்கு ஏற்பட்ட அந்த இடறல் பிறிதொருவருக்கு நிகழாத வண்ணம் வங்கி கணக்கு கடவு சொற்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று புரிகிறது.
வீட்டில் தனியாக வசிக்கும் பார்வையற்ற பட்டதாரி ஆசிரியருக்கு ஏற்பட்ட அந்த இடறல் பிறிதொருவருக்கு நிகழாத வண்ணம் வங்கி கணக்கு கடவு சொற்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று புரிகிறது.
நிச்சயமாக. அதே சமயம், நாமும் நமது வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மிகுந்த பாதுகாப்புடன் வைப்பது அவசியம்.
நிச்சயமாக. அதே சமயம், நாமும் நமது வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மிகுந்த பாதுகாப்புடன் வைப்பது அவசியம்.