“மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்” நடிகை குஷ்புவின் கருத்திற்கு வலுக்கிறது எதிர்ப்பு

,வெளியிடப்பட்டது

குஷ்புவின் கருத்திற்கு உங்கள் எதிர்வினை என்ன?

" மூளை வளர்ச்சி இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது . அங்கு

இருப்பவர்களுக்கும் மரியாதை இல்லை வெளியே போனவர்களுக்கும் மரியாதை இல்லை . "
என குஷ்புவின் புகைப்படத்தோடு எழுதப்பட்ட உரை.
- குஷ்பு சுந்தர் - BBIC NEWS | தமிழ்
பட மூலம், bbctamil.com

காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என குஷ்பு விமர்சித்துள்ளமைக்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, நேற்று அக்டோபர் 12 திங்கள்கிழமை டெல்லி சென்று, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை வந்த அவருக்கு பாஜக மகளிர் அணியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த குஷ்பு, காங்கிரஸ் ஒரு மூளை வளர்ச்சியற்ற கட்சி என்று தெரிவித்தார். குஷ்புவின் இந்தக் கருத்திற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குஷ்புவின் இந்த கருத்திற்குத் தனது கடுமையான எதிர்ப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் திரு. தீபக்நாதன்.

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்