குடும்பத்தின் ஒத்துழைப்பு, தொழில்நுட்பத்தின் துணை இவை எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மனப்பான்மை இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்கிறார் கட்ட சிம்ஹாச்சலம்

பட மூலம், thehindu.com
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் குடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான கட்ட சிம்ஹாச்சலம், கடந்த ஆண்டு குடிமைப்பணிகள் தேர்வில் 457 ஆவது இடத்தைப் பிடித்து, தற்போது ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிமைப்பணிகள் தேர்வில் மூன்றுமுறை வெற்றிபெற்ற சிம்ஹாச்சலம், முதலில் இந்தியாவிற்கான வெளிநாட்டு வணிகத்தின் உதவி தலைமை இயக்குநராகவும், பிறகு ஹைதராபாத் வருவாய்த்துறையில் உதவி ஆணையராகவும் பணியாற்றினார். அவர் ஐஏஎஸ் பணியையே அதிகம் விரும்பியதால், மீண்டும் குடிமைப்பணிகள் தேர்வெழுதி 457ஆவது இடத்தைப் பிடித்தார்.
சாதிப்பதற்கு பார்வையின்மை ஒரு தடையில்லை என அடித்துச் சொல்லும் சிம்ஹாச்சலம், குடும்பத்தின் ஒத்துழைப்பு, தொழில்நுட்பத்தின் துணை இவை எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மனப்பான்மை இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்கிறார்.
இதையும் படியுங்களேன்
நன்றி bbctamil.com: பார்வை திறன் இல்லை; உழைப்பு இருக்கிறது -கட்ட சிம்மாச்சலம் சாதித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
Be the first to leave a comment