“முயற்சியைக் கைவிடுக” பிரதமருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

1999ல் இயற்றப்பட்ட தேசிய அறக்கட்டளைச் சட்டம்தான், முதன்முதலில் ஆட்டிசம், மூளை முடக்குவாதம் பொன்ற குறைபாடுகளை அதிகம் கவனத்தில் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் காணப்படும் பாதுகாவலர் தொடர்பான சரத்துகள் அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான மறுவாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

போராடும் மாற்றுத்திறனாளி அமைப்புகள்
பட மூலம் newzhook.com

அறிவுசார் குறைபாடுகள் (intellectual disabilities), வளர்ச்சி குறைபாடுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வை நோக்கமாகக்கொண்டு, இந்திய அரசால் 1999ல் இயற்றப்பட்ட தேசிய அறக்கட்டளைச் சட்டத்தை (national trust act) முற்றிலும் ரத்து செய்துவிடுவது என நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது. இது நாடெங்கும் மாற்றுத்திறனாளிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவண் அரசின் செலவீனங்களுக்கான துறை மற்றும் இந்திய நிதித்துறைஇணைந்து, மேற்கண்ட சட்டத்தினை முற்றிலுமாக ரத்து செய்துவிடுவது என்கிற பரிந்துரையை நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு அனுப்பி வைத்தது. அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாகச்சாடும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகள், இதைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.

சட்ட திருத்தம் இல்லை, நீதித் திரிப்பு

திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

1999ல் இயற்றப்பட்ட தேசிய அறக்கட்டளைச் சட்டம்தான், முதன்முதலில் ஆட்டிசம், மூளை முடக்குவாதம் பொன்ற குறைபாடுகளை அதிகம் கவனத்தில் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் காணப்படும் பாதுகாவலர் தொடர்பான சரத்துகள் அறிவுசார் குறைபாடுடையவர்களுக்கான மறுவாழ்வில் முக்கியப் பங்காற்றுகின்றன.

மேலும், கேரண்டா உறைவிடத் திட்டம், நிர்மயா காப்பீடுத் திட்டம் இந்தச் சட்டத்தினால் ஊனமுற்றோருக்குக் கிடைத்த முக்கியமான நலத்திட்டங்களாகும். எனவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சார்ந்து இயங்கும் பல்வேறு அமைப்புகள் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளன.

ஆயிரக்கணக்கான கோடிகளில் சொகுசு விமானங்கள் வாங்கும் ஆட்சியாளர்கள், தன் சொந்த தேச மக்களின் மறுவாழ்விற்குக் கணக்குப் பார்க்கும் கொடுமையை எங்குபோய்ச் சொல்வது?

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்