முறையற்ற ஒளிபரப்பு யூடியூப் சேனல் வழங்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மின்நூல் பயிலரங்கம்.

,வெளியிடப்பட்டது

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன.

zoom logo

முறையற்ற ஒளிபரப்பு யூடியூப் சேனல் வழங்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான மின்நூல் பயிலரங்கம்.

நாள்: 11-10-2020 காலை 10:30.

இடம்: ஜூம் அரங்கம்.

கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு அவரவர் கேட்கும் தமிழ் நூல் ஒன்று இலவசமாக வழங்கப்படும். அது தொடர்பான முழுமையான அறிவிப்பு நிகழ்வின்போது தெரிவிக்கப்படும்.
கூட்டத்தில் இணைவதற்கான இணைப்பு:

https://us02web.zoom.us/j/85114138822?pwd=SjdJUW9taFY5L0kxN3owTkZEb0FCQT09

கூட்டக்குறியீட்டு எண்: 851 1413 8822
கடவுச்சொல்: 123456
கூட்டத்தை நெறியாள்கை செய்பவர்கள்:

பொன். குமரவேல் மற்றும் பொன். சக்திவேல்.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக நூல்களைத் தரும் நூலகங்களும், வாட்ஸ்அப் குழுக்களும் குறுநில மன்னர்களின் மனப்பான்மையிலேயே செயல்பட்டு வருகின்றன. புத்தகங்கள் கிடைக்கிறது என்பதற்காகவே, வாழ்த்துப்பாக்களை பாடிக்கொண்டு கடுமையான சொற்களை ஏற்றுக்கொண்டு அத்தகைய குழுக்களில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயணிக்கின்றனர். அவர்கள் தரும் புத்தகங்கள் பெரும்பாலும் இணையவெளியில் உள்ளவைதான். அந்நூல்களை எவ்வாறு தேடிக் கண்டடைவது, அவற்றை நாம் படிக்கும் வகையில் எவ்வாறு உருவாக்குவது என்ற தொழில்நுட்ப அறிவு இல்லாததன் காரணமாகவே, அவமானங்களை சுமந்தபடி பார்வை மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய அவமானங்களைத் தவிர்க்க. நாம் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. அதற்கான முதல் அடியை முறையற்ற ஒளிபரப்பு எடுத்து வைக்கிறது.

இப்பயிலரங்கில்: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் மின் நூலகங்கள் மற்றும் புத்தகங்களை தரும் வாட்ஸப் குழுக்கள் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்பது குறித்தும், அமேசான் கிண்டில், கூகுள் பிளேபுக்ஸ் போன்றவற்றில் கிடைக்கும் புத்தகங்களை பார்வையற்றோரும் படிக்கும் வகையில் எவ்வாறு மாற்றுவது, அமேசான் கிண்டிலில் உங்களுக்குப் பிடித்த நூல்களை எவ்வாறு எளிமையாக தேடிக் கண்டடைவது, அமேசான் கிண்டில் வழங்கும் இலவச புத்தகங்களை பெறுவது எப்படி, தமிழ் புத்தகங்கள் இலவசமாக கிடைக்கும் மூலங்கள் எவை, மேலும் உங்களது வினாக்கள் எங்களை வழி நடத்தும் திசையைப் பொறுத்து மேலும் சில புதிய விடயங்களையும் சொல்வோம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் நீங்களும் சொல்லலாம்.

பார்வை மாற்றுத்திறனாளிகளே! சுயமரியாதையுடன் சுயமாய் புத்தகங்களைப் படிக்க வாருங்கள் பயிலரங்கிற்கு.
முறையற்ற ஒளிபரப்பு: பொழுதுபோக்கிற்கு மட்டும்.
யூடியூப் சேனலுக்கான இணைப்பு:

https://www.youtube.com/channel/UCqM3cdIztUQF-yIXrIeuiLA

பார்வை மாற்றுத்திறனாளிகள் பலரும் பயிலரங்கில் பயன்பெற, இணையவெளியெங்கும் பகிருங்கள் பரப்புங்கள்!

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்