graphic திரு. அ.கு. மிட்டல் அவர்களின் சோக மரணம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. கவுல் அவர்களின் இரங்கல் அறிக்கை

திரு. அ.கு. மிட்டல் அவர்களின் சோக மரணம், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு. கவுல் அவர்களின் இரங்கல் அறிக்கை

,வெளியிடப்பட்டது

அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும் நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.

1. சிறப்பை நோக்கிய செயல்கள்

2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.

A.K. Mittal
A.K.மித்தல்

தேச தந்தை மகாத்மா காந்தி அவர்கள்  படுகொலை செய்யப்பட்டபோது, “நம் வாழ்க்கையிலிருந்து  ஒளி  வெளியேறி, எல்லா இடங்களிலும் இருள் சூழ்ந்துவிட்டது.” என்றார் பண்டிட் நேரு,., இருள் சூழ்ந்த இடங்களில் ஒளியேற்றிய ஒரு மாபெரும்   மனிதர் இன்று  இறைவனடி சேர்ந்துள்ளார். சமமான மற்றும் உள்ளடக்கிய சமூகம் உருவாக்க போராடியவர்களுள் முதன்மையாக திகழ்ந்த திரு அ. கு. மித்தல் அவர்கள் மாரடைப்பு காரணமாக டெல்லி மாநகரில் நோயிடாவில் அமைந்துள்ள யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, 22.09.2020 அன்று காலை 10.30  மணி அளவில்      அவரது மனைவி மீரா, மகள் நிதிகா மற்றும் மருமகன் துஷ்யந்த் ஆகியவரை விட்டு  மறைந்தார். ஆனால், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் உள்ளடக்கிய சமுதாயத்தை நோக்கிப் பணியாற்றியவர்கள்  என அவரது குடும்பம்  உலகளவில் விரிவடைந்துள்ளது.

உலக பார்வையற்றோர் ஒன்றியத்தின்  பொருளாளராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய அவர் உலகம் முழுவதும் வாழும் பார்வையற்றவர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை தனது  குடும்பத்தினராக எண்ணியவர்.

 பார்வையின்மை அவரது வாழ்க்கையில் சிறந்து விளங்குவதில் இருந்து அவரை ஒருபோதும் தடுத்ததில்லை.

“எங்கள் அமைப்பின் தலைவரும் மற்றும் எனது நீண்டகால நம்பகமான நண்பருமான திரு. அ.கு. மிட்டல் இனி இல்லை. என்பதை கனத்த இதயத்தோடு தெரிவிக்கிறேன்.   நாடு ஒரு பெரிய மனிதனை இழந்துவிட்டது என்பதையும், இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்பதையும் நான் இங்கு குறிப்பிட தேவையில்லை. அவரைப் போன்ற  புத்தி கூர்மையுடைய எந்தவொரு நபரையும் நான் என் வாழ்க்கையில்  இதுவரை பார்த்ததில்லை.

2007 ஆம் ஆண்டு முதல் நீண்ட காலமாக  திரு. மிட்டல் அவர்கள் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பில் தலைவராக இருந்தார்.

கல்வியே அதிகாரமளிப்பதற்கான திறவுகோல்”  என்ற பொதுவான கூற்றுக்கிணங்க, புது தில்லியில் பார்வையற்றோர் நிவாரண சங்கத்தால் (Blind Relief Association) நடத்தப்படும் பார்வையற்றோருக்கான  ஜேபிஎம்  முதுநிலை பள்ளியின் முதல்வராக பல ஆண்டுகளாக  பணியாற்றி, அங்கு பயின்ற நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரது மாணவர்கள் இன்று  வங்கி பணியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஆட்சி  அலுவலர்கள்  என விரிவாக விவரிக்க இயலாத ஏராளமான புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய பல பதவிகளை வகிக்கின்றனர்.

அவர்  பார்வையற்றோருக்கான தேசிய நிறுவனத்தின் (NIVH) தலைவராக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக  முதலில் டெஹ்ராடூனிலும் பின்னர் சென்னையில் உருவாக்கப்பட்ட  மையத்திலும்  தனித்துவத்துடன் பணியாற்றினார்.   இதற்கிடையில், கல்வி மீதான அவரது ஆர்வம், ஆங்கிலம் மற்றும் கல்வி  என்ற துறைகளில் இரட்டை  முதுகலை பட்டமாக பிரதிபலித்தது, பின்னர் அமெரிக்காவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பெர்கின்ஸ்   பார்வையற்றோருக்கான  பள்ளியில் கல்வியியல் துறையில் பட்டய கல்வியாக விரிவடைந்தது.

சமூக உள்ளடக்கம், சிறப்புக் கல்வி மற்றும் சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற  அம்சங்களில் புத்தகங்கள் வெளியிடுவது, அவரது முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் புத்தகங்கள் படைப்பதற்கு  வழிகாட்டுவது  போன்றவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக, குறிப்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உறுப்பினராக சமூகத் துறை தொடர்புடைய சட்டங்களுக்கு  அவர் வழங்கிய ஆக்கபூர்வமான  பங்களிப்பிற்கு நாடு என்றென்றும் கடன்பட்டிருக்கும்.

மிக முக்கியமாக, மூலோபாய வளர்ச்சி  மற்றும் ஐக்கிய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி திட்டங்கள்  தொடர்புடைய  இவரது தொலைநோக்கு பார்வை  குறித்து  சர்வதேச அமைப்புகள் பலமுறை இவரிடமிருந்து கேட்டுப்பெற்றுள்ளன. ஊனமுற்றவர்கள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்  தலைமைப் பொறுப்புகளையும் வழங்கியுள்ளன.  

அவர் தனது தொழில் வாழ்க்கையை சமூக செயற்பாடு மற்றும்  அறிவு தேடலுடன் சமன் செய்தார் என்பது அவரது மகத்துவம், அதே  வேளையில்

பார்வையுள்ள தனது மனைவி மீரா,  மற்றும் இரண்டு புதல்விகள்  என்ற அழகான குடும்பத்தை வழிநடத்தினார். அவர்களுள் இளையவர்  புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அவரது இழப்பு கணக்கிட முடியாதது. எனினும், அவருக்கு பிடித்த பின்வரும் இரண்டு செயல்களை செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்பதே அவரது  வாழ்விற்கும், நட்செயல்பாடுகளுக்கும்   நாம் செலுத்தும் ஒரு பெரிய அஞ்சலி ஆகும்.

1.  சிறப்பை நோக்கிய செயல்கள்

2. உரிமைகள் அடிப்படையிலான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல்.

இவ்வுலகில் அவரை போன்று வாழ வேறொருவரும் இல்லை

பார்வையற்றோருக்கான அகில இந்திய கூட்டமைப்பு

தமிழில் செல்வி. K. ஷியாமலா

தொடர்புகொள்ள: shyamalak1991@gmail.com

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்