திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

,வெளியிடப்பட்டது
7 ஜூலை, 2020

graphic Zoom
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே.
“எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 மட்டும்தான் நீர்த்துப் போவதற்கென்றே திருத்தப்படுகிறது.”
திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜன்
துணைத்தலைவர்; அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனம்.
“இந்தச் சட்டத்தால் நாம் உரிமைகளைப் பெற்றோம் என்று சொல்ல முடியாது. ஆனால், உரிமைகளை வலியுறுத்திப் பெறுகிற வாய்ப்பினையாவது வழங்கியது இந்தச் சட்டம். அதற்குள்ளாகவே திருத்தம் என்பது வேடிக்கையாக உள்ளது.”
முனைவர். முருகானந்தம்
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவை
“இருக்கிற இந்தச் சட்டத்திலேயே எதுவுமில்லை. இதை ஏன் திருத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுங்கள்.”
பேராசிரியர் சிவக்குமார்
வழக்கறிஞர் பிரிவு; பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்
“ஒரு சட்டம் யாருக்காக இயற்றப்பட்டதோ அவர்களை அது வலுப்படுத்துகிறதா அல்லது அரசை வலுப்படுத்துகிறதா எனப் பார்க்க வேண்டும். இந்த ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அரசைத்தான் வலுப்படுத்துகிறது.”
பேராசிரியர் தீபக்நாதன்
டிசம்பர் 3 இயக்கம்

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

1 thought on “திருத்தத்திற்கெதிரான தமிழகத்தின் குரல்கள்; திரட்டும் முயற்சியில் பேரவை

  1. இந்த சட்டம் திருத்தினால் மாற்று திறனாளிகளுக்கு என்ன பலன் ஏற்பட போகிறது எந்த நன்மையும் இப்ப இருக்கும் சட்டங்களால் எதையும் செய்ய இயலவில்லை சட்டத்தை திருத்துங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *