‘1000 மாதாந்திர உதவித்தொகையை 3000 ஆக உயர்த்துக’ அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

,வெளியிடப்பட்டது

graphic மேத்யூ மற்றும் அவரின் நண்பர்களால் பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது
படக்காப்புரிமை டைம்ஸ்நவ்
நன்றி டைம்ஸ் நவ்:
சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர்.
தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர்.
குழுவில் ஒருவரான தண்டபாணி, தற்போது அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் “ஊரடங்கின் காரணமாக நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் 15 கச்சேரிகள் கிடைத்துவிடும். ஆனால் இப்போது ஏதுமற்ற நிலையில், நகரின் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பல நல்லுள்ளம் படைத்த சமாரியன்களால் வழங்கப்படும் உணவு மற்றும் உதவிகள் எங்களைக் காப்பாற்றுகின்றன” என்றார்.
இசைக்குழுவின் மற்றொரு உறுப்பினரான தேசமுத்து, “இந்த ஊரடங்கு எங்களது வருமானத்தை மட்டும் பறிக்கவில்லை. என்னுடைய மனைவி பல வீடுகளில் வேலை செய்து சொற்ப வருமானம் ஈட்டி வந்தார். கரோனா அச்சம் காரணமாக முதலாளிகள் வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். தனியார்த்துறையில் வேலை பார்த்த என்னுடைய மகனும், ஆள் குறைப்பு காரணமாக வேலை இழந்து நிற்கிறான்” என்றார் பரிதாபமாக.
குழுவின் மூத்த உறுப்பினரான ராமச்சந்திரன், அரசு வழங்கும்மாதாந்திரஓய்வூதியமான ரூ. 1000ஐ ரூ. 3000மாகஉயர்த்தி வழங்கினால், அது தற்போதைய நெருக்கடி நிலையைக் கொஞ்சம்சமாளிக்க உதவியாகஇருக்கும் என்கிறார். தான் மூப்பின் காரணமாக இசைக்குழுவிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், இரயிலில் சிற்றுண்டிகள் விற்றுத் தனது அன்றாடத்தை நகர்த்தியதாகவும், இப்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது என வேதனைப்படுகிறார்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் நண்பர்களான மேத்யூ,  கங்காதரன் மற்றும் பலர் இணைந்து, தங்கள் சொந்த பணத்தில் இவர்களுக்கான உணவு மற்றும் உதவிகளை வழங்கினர். “நாங்கள் எங்களின் நண்பர்கள், பல நல்ல உள்ளங்களின் உதவிகளைப் பெற்று,சென்னையின் பல பகுதிகளில் இருக்கும் பார்வையற்றோருக்கு உதவி வருகிறோம், அவர்களுக்கான உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை எங்களால் முடிந்த அளவில் அவர்களிடம் சேர்த்து வருகிறோம்” என்கிறார் நண்பர்க்குழாமைச் சேர்ந்த சதீஷ்.
அவர்களுக்கான உணவும், உடையிம் வேண்டுமானால் சமாரியன்களின் கைகளில் இருக்கலாம். ஆனால், உரிமைகள்?

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்