பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் அறிவிப்பு:

,வெளியிடப்பட்டது

graphic அமைச்சர் சரோஜா

நேற்று (மார்ச் 21) சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான மானியக்கோரிக்கையின்போது, அத்துறையின் அமைச்சர் திருமதி. சரோஜா அவர்களால் மாற்றுத்திறனாளிகள் நலன்சார்ந்த பதினோரு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவை:

  
1.       மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்ந்தளிப்பு அமைச்சகத்தின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மண்டல மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
2.       மருத்துவமனை மற்றும் மனநலம் இல்லங்களிலுள்ள குணமடைந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஒன்றிணைக்க ஏதுவாக, 700 பயனாளிகள் பயன்பெறும் வகையில், தலா 4010000 செலவில் மதுரை, இராமநாதபுரம், திருச்சி, வேலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 21000000 செலவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இடைநிலை பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
3.        பார்வைத்திறன் குறையுடையோர் எளிதில் பிரெயில் முறையில் கற்பதற்கு ஏதுவாக, மின்னணு வடிவிலுள்ள புத்தகங்களை பிரெயிலி எழுத்துகள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி (electronic braille reader) தலா 35000 செலவில் 200 பயனாளிகளுக்கு 70 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
4.        பார்வைக்குறையுடையோர் மாணவர்களுக்கு பிரெயிலி முறையில் தரமான கல்வி பெறுவதற்கு ஒலி மற்றும் பிரெயிலி எழுத்து வடிவ தொடு உணர்வுடன் அறிந்துகொள்ள உதவும் நவீன வசதிகொண்ட திறன் வகுப்புகள் smart class for Visually Impaired) 12 பள்ளிகளில் ஒருகோடியே எட்டாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
5.        மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நிலையை மேம்படுத்த, சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, தற்போது வழங்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களுக்கு பதிலாக பூத்தையல் வேலைப்பாடு (embroidery) வசதிகளுடன்கூடிய தரம் உயர்த்தப்பட்ட தையல் இயந்திரங்கள் 3000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 3 கோடியே 30 லட்சம் செலவில் வழங்கப்படும்.
6.       சட்டம் பயின்ற  பட்டதாரி மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு அவர்கள் சட்டப் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளவும், வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துகொள்ளவும் வழங்கப்படும் உதவித்தொகை 10000 லிருந்து ரூபாய் 50000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
7.        மாற்றுத்திறனாளிகளுக்குத் தனியார்த்துறையிலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில், தனித்துவம் பெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் மாவட்டந்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக ஒரு கோடியே முப்பத்தொன்பது லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
8.         விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு 2 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையற்ற சூழல் வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்படும்.
9.        அதிக உதவி தேவைப்படும் (high support needs) மாற்றுத்திறனாளிகளின் தேவையினைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உதவும் வகையில் 200 நபர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம், தனிநபர் உதவிக்கான (personal assistant service) வழங்கப்படும். இப்பயிற்சி பெற்ற காப்பாளர்கள், கேர் கிவர் (care-giver) மற்றும் இச்சேவை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரம் பதிவேட்டில் பராமரிக்கப்படும். மேலும், கிராமப்புற மக்களுக்கான இச்சேவையினை அறிய ஆய்வு மேற்கொள்ளப்படும். தனிநபர் உதவிக்கான சேவைக்காக ஒருகோடி ரூபாய் நிதியம் (corpus fund) உருவாக்கப்படும்.
10.   மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா உட்கட்டமைப்பைஉருவாக்குவதற்காக தணிக்கைப் பணிகள் அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 790 கட்டிடங்கள் 4.74 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
11.    முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்படும் 200 சுற்றுலாத் தலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த தடையில்லா உள்கட்டமைப்பிற்கான தணிக்கைப் பணிகள் ஒருகோடியே இருபது லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்