ஆளுமை: பிரதமரின் சமூகவலைதளக் கணக்கைப் பராமரித்த மாற்றுத்திறனாளிப் பெண்: யார் இந்த மாலவிகா ஐயர்?

,வெளியிடப்பட்டது
graphic மாலவிகா ஐயர்
 படக்காப்புரிமை இந்து தமிழ்திசை

உலகப் பெண்கள் தினத்தில் தனது சமூகவலைதளக் கணக்கைப் பராமரிக்கும் பொறுப்பை, சமூக அக்கறை கொண்ட ஏழு பெண்களிடம் கையளித்தார் பிரதமர் மோடி. இவர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாலவிகா ஐயர் என்ற 22 வயது பெண் ஒரு மாற்றுத்திறனாளி. மாற்றுத்திறனாளிகளின்
சமூக ஒருங்கிணைப்பு குறித்துப் பல்வேறு தளங்களில் பேசியும், எழுதியும் இயங்கி வருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் மாளவிகா ஐயர். ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியில் வசித்தவர். அப்போது, 13-வது வயதில் விளையாடும்போது குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து தனது 2 கைகளையும் இழந்தவர். கால்களும் பாதிக்கப்பட்டன. எனினும், மன உறுதியுடன் படித்து முனைவர் பட்டம் பெற்றவர். சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை வளர்த்துக்கொண்டவர்.
graphic மாலவிகா ஐயர்
ஐணாவில் மாலவிகா ஐயர், படக்காப்புரிமை விக்கிப்பீடியா

கடந்த 2018 ஆம் ஆண்டு, உலகப் பெண்கள் தினத்தில், நாரிசக்தி என்ற உயரிய விருதினைக் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களிடமிருந்து பெற்றவர்.  இவர் மாற்றுத்திறனாளிகளை சமூகத்தோடு ஒருங்கிணைத்தல், சமூகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை உறுதி செய்தல் குறித்தும் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றி இருக்கிறார்.

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்