நன்றி இந்து தமிழ்த்திசை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதியோர் இல்லம் கட்ட  ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய கோவை ஆசிரியர்

,வெளியிடப்பட்டது
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
த.சத்தியசீலன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தானமாக வழங்கிய நிலத்தில் மனைவி தனபாக்கியத்துடன், ஆசிரியர் ஆர்.ஆறுமுகம். படம்: ஜெ.மனோகரன்
கோவை
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டுவதற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர்.
கோவையை அடுத்த அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிரி யர் ஆர்.ஆறுமுகம். இவர் டவுன் ஹால் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியரா கப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி தனபாக்கியம். செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு சொந்த மான நிலத்தை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதி யோர் இல்லம் கட்டுவதற்கு தான மாக வழங்கியுள்ளனர்.
“பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் நடத்திய நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொண்ட போது, அவர்கள் போதிய இடவசதி யின்றியும், அடிப்படை வசதிகளு மின்றியும் சிரமப்பட்டு வருவதை அறிந்தேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவர்க ளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத் தேன்.
32 சென்ட் நிலம்
அரிசிபாளையம் பகுதியில் எங்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 32 சென்ட் நிலத்தை தானமாகக் கொடுப்பது என மனைவியுடன் ஆலோசித்து தீர் மானித்து, இதன்படி தேசிய பார்வையற்றோர் இணையம் அமைப்புக்கு தான பத்திரமாக எழுதி கொடுத்தேன். தற்போது நாங்கள் மனநிறைவுடன் உள் ளோம்” என்றார் ஆசிரியர் ஆர்.ஆறுமுகம்.
இதேபோல், தான் நடத்திவந்த மெட்ரிக் பள்ளியையும் ஓர் அறக் கட்டளைக்கு எழுதி கொடுத்துள்ள தாக கேள்விப்பட்டு, அவரிடம் கேட்டபோது, ‘‘15 ஆண்டுகளாக நாச்சிப்பாளையம் பகுதியில், நாச்சிப்பாளையம் எஜூகேஷனல் சோஷியல் சர்வீஸ் என்ற தனியார் பள்ளியை நடத்தி வந்தேன். ஒரு கட்டத்தில் பள்ளியை என்னால் நடத்த முடியவில்லை. இதை யடுத்து திருப்பூரில் உள்ள யுனிட் என்ற அறக்கட்டளையிடம் ஒப்படைத்து விட்டு, தற்போது அதில் ஓர் உறுப்பினராக மட்டுமே உள்ளேன். அந்த அறக்கட்டளை யில் 150 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் யுனிட் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் தற்போது பள்ளியை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.
நிலதானம் பெற்ற தேசிய பார்வையற்றோர் இணைய தமிழ் நாடு மேற்கு பகுதி ஒருங் கிணைப்பாளர் பி.சதாசிவம் கூறும் போது, ‘‘ஆசிரியர் ஆர்.ஆறுமுகத் திடம் தானமாக பெற்ற நிலத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனா ளிகளுக்கு முதியோர் இல்லம் கட்டுவதற்கு தீர்மானித்துள்ளோம். முதல் தேவை இதுதான். இதற்காக கடந்த அக். 2-ம் தேதி அடிக்கல் நாட்டியுள்ளோம். இதைத் தொடர்ந்து மற்ற தேவைகளை பூர்த்தி செய்து கொள்வோம்.
முதியோர் இல்லம் அமைக்க உதவும் எண்ணம் கொண்டவர் களை அணுக உள்ளோம். இதே போல் நன்கொடையாளர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
தமிழக அரசும் எங்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என்று வேண்டுகிறோம். இது குறித்து அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளோம்’’ என்றார். 
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்