கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் தர கோரிக்கை 

,வெளியிடப்பட்டது

நன்றி இந்து தமிழ்த்திசை
சென்னை 
மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாற் றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரி யத்தின் மேலாளர் மஞ்சு பிரியா கூறியதாவது:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் 7 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தைச் சேர்ந்த வீரர் களை மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய கிரிக்கெட் வாரியம் 2013-ம் ஆண்டு இறுதியில் அங்கீகரித்தது. அதையடுத்து 2014-ம் ஆண்டு முதல் எங்கள் அணியினர் மண்டல வாரியாகவும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விளையாடி வருகின்றனர்.
கடந்த 5-ம் தேதி இங்கிலாந் தில் தொடங்கிய மாற்றுத் திறனாளி களுக்கான டி20 உலக கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வெற்றது. இந்த அணியில் எங்கள் வாரியத்தைச் சேர்ந்த சுகனேஷ் மகேந்திரன் (வயது 29) விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், செவிலி மேடு கிராமத்தைச் சேர்ந்த இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவரைப் போல மற்ற வீரர்களும் சாதாரண குடும்பப் பின்னணியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுகளை அங்கீகரித்ததுபோல மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியை யும் அங்கீகரிக்க வேண்டும். அவ் வாறு செய்தால் தனி விளையாட்டு மைதானம், உதவி, சலுகை, வேலைவாய்ப்பு கிடைக்கும். சாதாரணமானவர்களின் கிரிக் கெட் போட்டியை மக்கள் பார்த்து ரசிப்பதுபோல மாற்றுத்திறனாளி களின் கிரிக்கெட் போட்டியையும் பார்த்து அங்கீகரிக்க வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தில் மாற்றுத்திற னாளிகள் கிரிக்கெட் அணியை அங்கீகரிக்க வலியுறுத்தி முதல் வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு மஞ்சு பிரியா கூறினார்.
இந்தப் பேட்டியின்போது, தமிழ் நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியத்தின் புரவலர் கே.ராகவி, இங்கிலாந்து டி20 உலக கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்றிருந்த சுகனேஷ் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்