நீண்ட நாட்களாகக் காலியாக இருக்கிற தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்புப் பட்டியல்:

,வெளியிடப்பட்டது
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 10 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கடந்த ஆண்டே நியமிக்கப்படவிருந்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் அது தடைபட்டுவிட்டது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் அமைக்கப்பட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் முயற்சியால், தற்போது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள்,
பட்டதாரி ஆசிரியர்கள்
மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
வெளியிடப்பட்டுள்ள பணிமூப்புப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களின் மூலமாக ஆணையரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டு, அடுத்த வாரத்தில் பல்வேறு பாடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையவை
 வெளியானது பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல்
 *
சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு! அமைக்கப்பட்டது ஆசிரியர்கள் அடங்கிய குழு
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்